மேலும் அறிய

முதல்வர் ஸ்டாலின் ருத்ரதாண்டவம் ”தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா” உயிரே போனாலும்...

CM Stalin Speech: அநாகரிகத்தின் அடையாளமே பாஜகதான் என பாஜகவின் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தித் திணிப்பு நடைபெறுவதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் நடபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

”தொகுதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும்”

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு, மத்திய அரசு எதிராகச் செயல்படுவதாக, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்கிற திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில், திருவள்ளூரில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது “ அநாகரிகமாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்துள்ளோம். அநாகரிகத்தின் அடையாளமே, பாஜகதான். தொகுதி மறுசீரமைப்பு என்கிற கத்தி தென் மாநிலங்கள் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு வந்தால், தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும்.

உங்களுக்கு என்ன பிரச்னை

என்றும் மக்களுக்கான குரலாக ஒலிப்போம்; வாதாடியும், போராடியும் நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவோம்.தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா, நாங்கள் உழைத்து வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கு நிதியை தருவதில் உங்களுக்கு என்ன பிரச்னை , மாணவர்களின் நலனுக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமா.

இது தேசிய கல்விக் கொள்கை அல்ல. காவிக் கொள்கை, இது இந்தியாவை வளர்வதற்காக கொண்டுவரப்பட்டவை அல்ல, இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கைபாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடி பணிய மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

துணை நிற்பது கடமை:

தொடர்ந்து பேசுகையில், ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பாஜக அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு இருக்கிறது. மத்திய அரசு நம்மை சிறுமைப்படுத்தப் பார்க்கிறது. பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம் .

முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிமொழி:

இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி எடுத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay VS Seeman: நடிகன் ஆளலாமா? விஜய்யை விடாமல் அடிக்கும் சீமான்.. என்னதாங்க காரணம்?
Vijay VS Seeman: நடிகன் ஆளலாமா? விஜய்யை விடாமல் அடிக்கும் சீமான்.. என்னதாங்க காரணம்?
மத்திய அரசு நிறுவனத்தில் 102 காலி பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க... விபரங்கள் உள்ளே!!! 
மத்திய அரசு நிறுவனத்தில் 102 காலி பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க... விபரங்கள் உள்ளே!!! 
Watch Video: சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்பை அடித்த பிரபல கிரிக்கெட் வீரர் - வீடியோவை பாருங்க..!
Watch Video: சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்பை அடித்த பிரபல கிரிக்கெட் வீரர் - வீடியோவை பாருங்க..!
TN Weather: அடுத்த 7 நாட்கள்... தமிழ்நாட்டில் வானிலை இப்படித்தான் இருக்குங்க!
TN Weather: அடுத்த 7 நாட்கள்... தமிழ்நாட்டில் வானிலை இப்படித்தான் இருக்குங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madhampatti Rangaraj : ’Oii பொண்டாட்டி...மாதம்பட்டி அட்ராசிட்டி!’’வீடியோ வெளியிட்ட ஜாய்
போடியில் களமிறங்கும் அதிமுகவினர் வளர்த்தவர்களே எதிராக சதி ராமநாதபுரமே செல்லும் OPS? | OPS Ramanathapuram
”தமிழ் நடிகர்களை விட இந்தியில்...மட்டம் தட்டிய ஜோதிகா”பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் Jyotika on Tamil actors
சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay VS Seeman: நடிகன் ஆளலாமா? விஜய்யை விடாமல் அடிக்கும் சீமான்.. என்னதாங்க காரணம்?
Vijay VS Seeman: நடிகன் ஆளலாமா? விஜய்யை விடாமல் அடிக்கும் சீமான்.. என்னதாங்க காரணம்?
மத்திய அரசு நிறுவனத்தில் 102 காலி பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க... விபரங்கள் உள்ளே!!! 
மத்திய அரசு நிறுவனத்தில் 102 காலி பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க... விபரங்கள் உள்ளே!!! 
Watch Video: சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்பை அடித்த பிரபல கிரிக்கெட் வீரர் - வீடியோவை பாருங்க..!
Watch Video: சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்பை அடித்த பிரபல கிரிக்கெட் வீரர் - வீடியோவை பாருங்க..!
TN Weather: அடுத்த 7 நாட்கள்... தமிழ்நாட்டில் வானிலை இப்படித்தான் இருக்குங்க!
TN Weather: அடுத்த 7 நாட்கள்... தமிழ்நாட்டில் வானிலை இப்படித்தான் இருக்குங்க!
ரூ.8 லட்சம்தான் பட்ஜெட்... மைலேஜை அள்ளித் தரும் கார்கள் இதுதான் - என்னென்ன வண்டி?
ரூ.8 லட்சம்தான் பட்ஜெட்... மைலேஜை அள்ளித் தரும் கார்கள் இதுதான் - என்னென்ன வண்டி?
எமனாக மாறிய ஏஐ... மகனையே தாயை கொலை செய்ய வைத்த கொடூரம் - என்ன நடந்தது?
எமனாக மாறிய ஏஐ... மகனையே தாயை கொலை செய்ய வைத்த கொடூரம் - என்ன நடந்தது?
திரையுலகில் யுவனிசம் தொடரட்டும்.. நீங்கள் பார்த்திராத Unseen போட்டோ.. அன்புடன் வாழ்த்திய மனைவி
திரையுலகில் யுவனிசம் தொடரட்டும்.. நீங்கள் பார்த்திராத Unseen போட்டோ.. அன்புடன் வாழ்த்திய மனைவி
janhvi kapoor: 3 குழந்தைகள் பெத்துக்கணும்.. ஜான்வி கபூரூக்கு இப்படி ஒரு ஆசையா.. காரணம் இதுதானாம்!
janhvi kapoor: 3 குழந்தைகள் பெத்துக்கணும்.. ஜான்வி கபூரூக்கு இப்படி ஒரு ஆசையா.. காரணம் இதுதானாம்!
Embed widget