மேலும் அறிய

LSG Vs PBKS, IPL 2024: தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? லக்னோ - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

LSG Vs PBKS, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

LSG Vs PBKS, IPL 2024: பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

லக்னோ - பஞ்சாப் மோதல்:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தோல்விடைந்தது.  மறுமுனையில் லக்னோ விளையாடிய ஒரு போட்டியிலும் தோல்வியுற்றது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. எனவே,  இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

லக்னோ அணியின் முதல் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான். இன்றைய போட்டியில் அந்த தவறை லக்னோ அணி திருத்திக் கொள்ள வேண்டும். கே.எல். ராகுல் மற்றும் பூரான் நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கை சேர்க்கிறது. நவீன் உல் ஹக் மற்றும் ரவி பிஷ்னாய் என பந்துவிச்சு யூனிட் வலுவாக உள்ளது. மறுமுனையில் பஞ்சாப் அணியில் பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும், நல்ல திறன் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், கடந்த போட்டியில் அந்த திறனை முழுமையாக வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. கேப்டன் தவான் உள்ளிட்டோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமாகும்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணி 3 முறையும், பஞ்சாப் அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.  லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 201 ரன்களையும், குறைந்தபட்சமாக 133 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 257 ரன்களையும், குறைந்தபட்சமாக 159 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

ஏகனா மைதானம் எப்படி?

கடந்த ஐபிஎல் தொடரின் போது ஏகனா மைதானம் இரண்டு விதமான களங்களை கொண்டிருந்தது. போட்டியின் மத்தியில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவித்தனர். இரண்டாம் பாதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், சேஸிங் மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால், இந்த முறை அதிரடியான பேட்டிங்கிற்கு சாதகமாக ஏகனா மைதானம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி விவரங்கள்:

லக்னோ: கே.எல். ராகுல், குயின்டன் டி காக், தேவ்தத் படிக்கல், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர்

பஞ்சாப்: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget