Aiden Markram SRH Captain: சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..! அடடே இவரா..?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். மார்க்ரம் தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டியில் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐபிஎல் 2023 தொடருக்கான ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்கள் தங்களது முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனை தக்கவைக்க விரும்பவில்லை. இதையடுத்து, ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக மார்க்ரம் அல்லது முன்னாள் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனான மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியது.
THE. WAIT. IS. OVER. ⏳#OrangeArmy, say hello to our new captain Aiden Markram 🧡#AidenMarkram #SRHCaptain #IPL2023 | @AidzMarkram pic.twitter.com/3kQelkd8CP
— SunRisers Hyderabad (@SunRisers) February 23, 2023
28 வயதான மார்க்ரம் தென்னாப்பிரிக்காவில் நடந்த எஸ்ஏ20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எய்டன் மார்க்ராம் தலைமை தாங்கினார். 6 அணிகள் கொண்ட இந்த லீக்கில் சன்ரைசர்ஸ் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. லீக் இறுதி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சாம்பியன் பட்டத்தை மனதில்கொண்டு ஐபிஎல் போட்டியிலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஏ. லீக் 2023 தொடர் அரையிறுதியில் ஒரு சதம் உட்பட 336 ரன்களும், 11 விக்கெட்களையும் வீழ்த்திருந்தார் மார்க்கரம். அதேபோல், கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐடன் மார்க்ரம் அதிக ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் 2022 தொடரில் மார்க்ரம் 381 ரன்கள் எடுத்திருதார். கடந்த 2021 ம் ஆண்டு ஐபிஎல் தொடரொல் அறிமுகமான மார்க்ரம் இதுவரை 20 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 527 ரன்கள் எடுத்துள்ளார்.
கேன் வில்லியம்சன்:
ஐபிஎல் 2022 தொடரில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன், அந்த அணியை ளேஆஃப்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதற்குப் பிறகு, சன்ரைசர்ஸ் ஐபிஎல் 2023 க்கு வில்லியம்சனைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. புதிய கேப்டனை தேடிய சன்ரைசர்ஸ் மயங்க் அகர்வாலை வாங்கியபோது, புதிய கேப்டனாக நியமிக்கபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், மார்க்ரன் அகர்வாலை பின்னுக்கு தள்ளி கேப்டனாக பொறுப்பேற்றார்.
இளம் வீரர்கள்:
சன்ரைசர்ஸ் அணியில் தற்போது அப்துல் சமத், அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங், ஹாரி ப்ரூக், மயங்க் தாகர், பசல்ஹக் பரூக்கி, அகீல் ஹொசைன், மார்கோ ஜான்சென், கார்த்திக் தியாகி, கிளாசென், புவனேஷ்குமார், மயங்க் மார்கண்டே, மார்க்ரம், நடராஜன், நிதிஷ்குமார்ரெட்டி, பிலிப்ஸ், அடில் ரஷீத், சன்வீர்சிங், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், விவ்ராந்த் ஷர்மா, சமர்த் வியாஸ், வாஷிங்டன் சுந்தர், உபேந்திர யாதவ் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.