பெரிய விசில் அடிங்க.. சி.எஸ்.கேவின் புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தினார் தோனி..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸியை கேப்டன் தோனி நேற்று அறிமுகப்படுத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸியை கேப்டன் தோனி நேற்று அறிமுகப்படுத்தினார்.
2021 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டில்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
தொடருக்காக தயாராகி வரும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். காலையில் இண்டோரில் பயிற்சி, மாலையில் நெட் பயிற்சி என அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னதாகவே பயிற்சியை தொடங்கிவிட்டார். சமீபத்தில், வலைபயிற்சியில் 100 மீட்டருக்கு மேல் சிக்ஸ் அடித்த தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகின. மேலும், ஃபிட்டாக இருக்கும் அவரது புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸியை கேப்டன் தோனி நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதொடர்பாக சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தும் தோனி, “சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க” என்று கூறுகிறார். புதிய ஜெர்ஸி, இந்திய ராணுவ வீரர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தோனியின் இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் சென்சேஷன்.
13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணியின் ஜெர்ஸி மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடக்கவிருக்கும் தொடரில், புதிய ஜெர்ஸியில் தோனி உட்பட அணி வீரர்களைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.