Ind vs Eng 4th test: ‛லீடு’ எடுத்தது இங்கிலாந்து... இந்தியாவின் ‛பாலோ ஆன்’ முயற்சி தோல்வி!
போப் - மொயீன் அலியின் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஜடேஜா ப்ரேக் செய்தார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான் இன்று, ஆரம்பத்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை தந்தார். மாலன் மற்றும் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தார்.
இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்
ஆனால், அடுத்து களமிறங்கிய போப், பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோர் இங்கிலாந்துக்கு ரன் சேர்த்தனர். 62-5 என தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு, போப் மற்றும் பேர்ஸ்டோ பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு ரன் குவித்தனர். இன்றைய போட்டியில் களத்தில் இருந்த பேர்ஸ்டோ, சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்துள்ளார்.
India claimed two wickets in the afternoon session while England added 88 runs to their total.#WTC23 | #ENGvIND | https://t.co/zRhnFj1Srx pic.twitter.com/3twRKA1qZj
— ICC (@ICC) September 3, 2021
37 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது சிராஜ் பந்துவீச்சில் பேர்ஸ்டோ அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி, போப்போடு ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். இந்த இணை 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜாவின் பந்துவீச்சில் மொயீன் அலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். மொயீன் அலி பெவிலியன் திரும்பியதை அடுத்து, கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் களமிறங்கினார். இரண்டாவது இன்னிங்ஸின், மாலை தேநீர் இடைவெளிக்கு பிறகு போப் மற்றும் வோக்ஸ் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர்.
முதல் நாள் அப்டேட்
நேற்று, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 61.3 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி, ஷர்துல் தாகூரின் அரை சதங்கள் அணியின் ஸ்கோரை 191 வரை கொண்டு சென்றது. இங்கிலாந்து அணி 45 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. ஸ்கோர்: 246/7 (70.4 ஓவர்கள்)
மீண்டும் ஜாவ்ரோ
இரண்டாம் நாள் போட்டியின்போது, மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர் ஜாவ்ரோ மைதானத்திற்குள் வந்து சென்றார். மூன்றாவது முறையாக இங்கிலாந்து மைதானத்திற்குள் ஜாவ்ரோ என்ற கிரிக்கெட் ரசிகர் புகுந்துள்ளது காமெடியையும் தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இங்கிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பற்றி கேள்வி எழுப்ப வைத்துள்ளது. இம்முறை மைதானத்திற்குள் புகுந்த ஜாவ்ரோ, உமேஷ் யாதவுக்கு பதிலாக பெளலிங் வீசி ஆக்ஷன் செய்து கொண்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.