இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் இங்கிலாந்து அணி வீரர்கள் யார்?
5 போட்டிகள் கொண்ட T20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கின்றன
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 5 போட்டிகள் கொண்ட T20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கின்றன. இந்தத் தொடர் புனேவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. அவர் காயம் காரணமாக விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: - கேப்டன் இயான் மோர்கன், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் கரண், சாம் கரண், லிவிங்ஸ்டன், பார்க்கின்சன், அதீல் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டாப்லே, மார்க் வுட், ஜேக் பால், டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டன்.