மேலும் அறிய

பகுதிநேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் & வாழ்வாதார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? எழும் வலியுறுத்தல்!

பகுதிநேர ஆசிரியர்களை தாமதமின்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’2012ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பகுதி நேர ஆசிரியர்களாக ஓவியம், உடற்கல்வி, கணினி அறிவியல், தையல் என கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக 5,000 ரூபாய் ஊதியத்தில் 15,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

13 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பணியாற்றிய போதிலும் தற்போது 12,500 ஊதியம்தான் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக பெறுகிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் பள்ளிகளின் மற்ற வேலைகளையும் பார்க்கும் இவர்கள் பள்ளி நாட்கள் முழுவதுமாக பணியாற்றுகின்றனர். 

13 ஆண்டுகளுக்கும் மேலாக..

13 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மே மாதம் சம்பளம், பொங்கல் ஊக்கத் தொகை, மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வாறு போராடும் போது கணிசமான தொகை ஊதிய உயர்வாக வழங்கப்படுகிறது.

இதேபோல்தான் பணிநிரந்தரம் வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் நடந்த போராட்டத்தின் போது 23-01-2026 அன்று அறிவித்த சம்பள உயர்வு ரூ.2,500 மே மாத உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் மற்றும் சிறப்பு மதிப்பெண் போன்ற உறுதிகள் இன்னும் அரசாணையாக்காமல் இருப்பதால் நடைமுறைக்கு வரவில்லை. காலம் கடந்த இந்த 3 அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் சந்திக்கின்ற வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. இந்தக் குறைந்த ஊதியம் அவர்கள் குடும்பத்தை கவனிப்பதற்கும், பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும் போதுமானதல்ல. 

பகுதிநேர ஆசிரியர்கள் தலைகுனியாமல் இருக்க முடியும்

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என சொல்லுகிற முதல்வர் ஸ்டாலின் அதை செயலில் காட்ட குறைந்த சம்பளத்தில் தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் குடும்பங்களை முன்னேற்ற 2012-ம் ஆண்டுக்கு முன்பாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை ஆகிய பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்ததை பின்பற்றி, நிரந்தரம் செய்யலாம். பணி நிரந்தரம் செய்தால் காலமுறை சம்பளம், அரசு சலுகைகள், பணப் பலன்கள் கிடைத்து பகுதிநேர ஆசிரியர்கள் தலைகுனியாமல் இருக்க முடியும்.

அல்லது மாதம் ரூ.30 ஆயிரம் கிடைக்கும் வகையில் காலமுறை ஊதியமாகமாகவும் வழங்கலாம். அத்துடன் ஏற்கனவே இறந்து போன பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வாழ்வாதார நிதியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget