மேலும் அறிய

Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?

Tata Sierra EV AWD: ஹாரியர் மின்சார எஸ்யுவியை போன்றே சியாரஇந்திய் மின்சார எடிஷனிலும் ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தை வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

Tata Sierra EV AWD: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சியாரா மின்சார எஸ்யுவி, நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் சந்தைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

டாடா சியாரா மின்சார எடிஷன்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகப்படியான மின்சார கார் மாடல்களை கொண்ட ப்ராண்டாக டாடா மோட்டார்ஸ் திகழ்கிறது. அதன்படி, 6 மாடல்கள் உள்ள நிலையில், ஏழாவது மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அது மஹிந்திராவின் BE 6 கார் மாடலுடன் மோத உள்ள சியாராவின் மின்சார எடிஷனாகும். கடந்த நவம்பர் மாதம் இன்ஜின் எடிஷன் சியாரா மாடல் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, மின்சா எடிஷனின் வெளிப்புறமும் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து காரின் முன் மற்றும் பின்புற பகுதிகளின் விவரங்களையும் விளம்பர வீடியோவில் காட்சிப்படுத்தியது. 

சியாரா மின்சார எடிஷனின் டிசைன் விவரங்கள்:

விளம்பர வீடியோக்கள் வெளியானதுமே சியாரா மின்சார எடிஷனின் டிசைன்கள் வாடிக்கையாளர்களை உடனடியாக கவர்ந்தது. அதன் பூஜ்ஜிய உமிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக, முன்பகுதியானது நேர்த்தியானதாகவும், அதிக வேலைப்பாடு இல்லாததாகவும் தோற்றமளிக்கிறது.  அதன் முன்பக்கத்தின் மேல் பகுதியானது கிட்டத்தட்ட முழுவதுமாக வாகனத்தின் உடலின் நிறத்தையே கொண்டுள்ளது. தடிமனான மற்றும் மிகவும் ஒருங்கிணைந்த முறையில், முழு அகல பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகள் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வாகனத்திற்கு மிகவும் வசீகரிக்கும் தோற்றத்தை அளிக்கிறது.


Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?

காரின் அடிப்பகுதியானது பெரும்பாலும் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. குறைந்த மற்றும் ஹை பீம் லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், ஸ்கிட் ப்ளேட்கள் ஆகியவை ஒரே மாதிரியான டிசைனை கொண்டுள்ளன. பின்புற பகுதி ஒட்டுமொத்தமாக இன்ஜின் எடிஷனை அப்படியே பிரதிபலிக்கிறது.  கருப்பு நிறத்தில் சியாரா ev என குறிப்பிடபட்டு இருப்பதே அங்குள்ள வித்தியாசமாகும். பக்கவாட்டில் தனித்துவமான 19 இன்ச் அலாய் வீல்களை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்துகிறது. 

சியாரா மின்சார எடிஷன் - உள்ள என்ன தான் இருக்கு?

மின்சார எடிஷனின் உட்புறமானது இன்ஜின் அடிப்படையிலான சியாரவை பெரும்பாலும் அப்படியே பின் தொடர உள்ளது. டாடா மோட்டார்ஸ் புதிய வண்ண ஆப்ஷனை பயன்படுத்துவதோடு, மின்சார எடிஷனுக்கு என சில குறிப்பிட்ட செயல்பாடுகளை இணைக்க, மின்னணு சாதனங்களின் மென்பொருளையும் மாற்றியமைக்கும். கூடுதலாக லெக் ரூம் மற்றும் பின்புறத்தில் மேம்பட்ட இருக்கைகளுடன் கூடிய புதிய லவுஞ்ச் இருக்கை விருப்பத்தை  டாடா வழங்கக்கூடும். மேலும் கெஸ்டர் கண்ட்ரோல்ட் பவர் டெயில்கேட், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், AR-HUD, மெமரி மற்றும் வெல்கம் செயல்பாடுகளுடன் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பவர்ட் ஓட்டுநர் இருக்கை மற்றும் கூடுதல்-பெரிய பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் பட்டியலிடப்படும். பாதுகாப்பை உறுதிபடுத்த, ஆறு ஏர்பேக்குகள், 360º கேமரா அமைப்பு, ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் 20+ மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.


Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?

சியாரா மின்சார எடிஷன் - ஆல் வீல் ட்ரைவ்

டாடா சியரா மின்சார எடிஷனானது ஒற்றை-மோட்டார் ரியர் வீல் ட்ரைவ் வகையிலும் இரட்டை-மோட்டார் ஆல் வீல் ட்ரைவ் வகையிலும் சந்தைப்படுத்தப்படலாம், இரண்டும் சுதந்திரமான பின்புற சஸ்பென்ஷனைக் கொண்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் இரண்டு LFP பேட்டரி பேக்குகளை தேர்வு பெறலாம். அவற்றில் பெரிய ஆப்ஷன் ஒற்றை-மோட்டார் RWD வேரியண்டானது 600 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பை வழங்கக் கூடுமாம். வாகனத்திலிருந்து ஏற்றுவதற்கு (V2L) இரு வைழி சார்ஜிங் செயல்பாடு சியாரா மின்சார எடிஷனில் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

இனி சியாரா மட்டுமே இல்லை..

இந்திய சந்தையில் ஆல் வீல் ட்ரைவ் கொண்ட முதல் மின்சார கார் மாடல் என்ற பெருமை, டாடா ஹாரியர் மின்சார எடிஷனுக்கே உள்ளது. உள்நாட்டில் மலிவு விலையில் கிடைக்கும் இரட்டை மோட்டாரை கொண்ட ஆல் வீல் ட்ரைவ் மின்சார கார் மாடலாகவும் ஹாரியர் திகழ்கிறது. இதனை தொடர்ந்து BYD சீல், கியா EV6, கியா EV9, BYD சீலியன் 7, ஆகிய வெகுஜன சந்தைக்கான மின்சார மாடல்களிலும் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் கிடைக்கிறது. இந்நிலையில் தான், டாடாவின் ஆல் வீல் ட்ரைவ் கொண்ட இரண்டாவது மின்சார கார் மடலாக சியாரா விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை 20 முதல் 25 லட்சம் வரை விற்பனை நிர்ணயிக்கப்படலாம். அதாவது ஆல் வீல் ட்ரைவ் வேரியண்டில் கிடைக்கும் ஹாரியரின் ரூ.28.99 லட்சம் என்பதை காட்டிலும், குறைவான விலையிலேயே சியாராவின் ஆல் வீல் ட்ரைவ் எடிஷன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.  

Frequently Asked Questions

டாடா சியாரா மின்சார எஸ்யுவி எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

டாடா சியாரா மின்சார எஸ்யுவி இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியாரா மின்சார எடிஷனின் வெளிப்புற வடிவமைப்பு எப்படி இருக்கும்?

இதன் முன்புறம் பூஜ்ஜிய உமிழ்வைக் குறிக்கும் வகையில் நேர்த்தியாகவும், முழு அகல பகல்நேர விளக்குகள் ஒருங்கிணைந்தும் கவர்ச்சிகரமாக இருக்கும். பின்புறம் இன்ஜின் எடிஷனைப் போலவே இருக்கும்.

சியாரா மின்சார எடிஷனில் என்னென்ன உட்புற அம்சங்கள் இருக்கும்?

இது இன்ஜின் எடிஷனைப் போலவே இருக்கும், ஆனால் புதிய வண்ண விருப்பங்கள், மேம்பட்ட இருக்கைகள், 10.25-இன்ச் டிஜிட்டல் க்ளஸ்டர், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 360° கேமரா போன்ற அம்சங்கள் இருக்கும்.

சியாரா மின்சார எடிஷன் ஆல் வீல் ட்ரைவ் வசதியுடன் வருமா?

ஆம், சியாரா மின்சார எடிஷன் ஒற்றை-மோட்டார் ரியர் வீல் ட்ரைவ் மற்றும் இரட்டை-மோட்டார் ஆல் வீல் ட்ரைவ் வகைகளில் வர வாய்ப்புள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
ஒரே டேங்கில் 1200 KM மைலேஜ்: 4 லட்சம் பேரின் சாய்ஸ் 'கிராண்ட் விட்டாரா'... ஏன் இவ்வளவு மாஸ் தெரியுமா?
ஒரே டேங்கில் 1200 KM மைலேஜ்: 4 லட்சம் பேரின் சாய்ஸ் 'கிராண்ட் விட்டாரா'... ஏன் இவ்வளவு மாஸ் தெரியுமா?
வரப்போகிறான் ஆஃப்ரோட் அரசன்... லாஞ்ச் மோடில் Royal Enfield Himalayan 750 - எப்போது அறிமுகம்?
வரப்போகிறான் ஆஃப்ரோட் அரசன்... லாஞ்ச் மோடில் Royal Enfield Himalayan 750 - எப்போது அறிமுகம்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget