![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஜிவா தோனிக்கு தம்பியா, தங்கையா? நெட்டிசன்ஸ் வைரலாக்கும் Daddy Dhoni..!
தோனி பற்றி மகிழ்ச்சியான செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த செய்தி முன்னாள் இந்திய கேப்டன் இரண்டாவது முறையாக தந்தையாக ஆவதற்கு தயாராகலாம் என்றுதான்.
![ஜிவா தோனிக்கு தம்பியா, தங்கையா? நெட்டிசன்ஸ் வைரலாக்கும் Daddy Dhoni..! dhoni wife sakshi expecting second child in 2022 ஜிவா தோனிக்கு தம்பியா, தங்கையா? நெட்டிசன்ஸ் வைரலாக்கும் Daddy Dhoni..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/17/eb78f42bf28dd25fdbd910874e6a7772_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கு, தோனியின் மனைவி சாக்ஷி இரண்டு முறையாக கர்ப்பமாக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உண்மையா இல்லை என எந்த தகவலும், தோனி தரப்பில் இருந்து இல்லை என்றாலும், இது மேலும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோருக்கு இந்த தசரா சிறப்பு நிகழ்வாக அமைந்தது. கேப்டனாக தனது 300ஆவது டி 20 போட்டியில், தோனி சிஎஸ்கே அணிக்கு 4வது ஐபிஎல் பட்டத்தை பெற்றுக்கொடுத்துள்ளார். இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எளிதாக வென்றார். வெற்றிக்கு ஒரு நாள் கழித்து, தோனிக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த செய்தி முன்னாள் இந்திய கேப்டன் இரண்டாவது முறையாக தந்தையாக ஆவதற்கு தயாராகலாம் என்று தான்.
இதுதொடர்பாக டுவிட்டர் மற்றும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் வதந்திகள் மற்றும் ஊகங்கள் வந்தன. இது உண்மையா என்று நிரூபிக்கப்படமால் இருந்த நிலையில், இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினர். இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்காவும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளதாக டுவீட்கள் பதிவாகியுள்ளன.
Priyanka Raina confirms that Sakshi Dhoni is pregnant for the second time ❤️
— DHONI Trends™ 🏆 (@TrendsDhoni) October 15, 2021
So Ziva will have a sibling soon
Congrats in advance @msdhoni @SaakshiSRawat 🎉
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் குடும்பங்களும் அணியுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்தன. அவர்களை அனைத்து சிஎஸ்கே போட்டிகளிலும் காண முடிந்தது வழக்கமான அம்சமாக இருந்தன. தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் அவர்களின் மகள் ஜிவா ஆகியோர் அனைத்து சிஎஸ்கே போட்டிகளிலும் தொடர்ந்து இருந்தனர். சிஎஸ்கே பட்டத்தை வென்ற பிறகு தோனியை சாக்ஷி, ஜிவா கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளியப்படுத்திய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தோனியின் மகள் ஜிவாவுக்கு இப்போது 6 வயது. 2015 ஐசிசி உலகக் கோப்பையில் அவரது தந்தை தோனி இந்தியாவை வழிநடத்தும் போது அவர் பிறந்தார்.
#Yellove you Chinna Thala.! 💛🦁 https://t.co/dVwUz8WI5K
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 15, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)