Csk vs Hyderabad: டாஸ் வென்ற ஹைதராபாத்.. மீண்டு வருமா சிஎஸ்கே.. மேஜிக்கிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 17ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன.
இன்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஹைதராபாத் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 17ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன. ஆட்டம் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில் முதற்கட்டமாக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
சிஎஸ்கேவின் ப்ளேயிங் லெவன்
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (சி), எம்எஸ் தோனி (WK), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா (டுவைன் பிரிட்டோரியஸுக்குப் பதிலாக) )
ஹைதாராபாத் ப்ளேயிங் லெவன்
அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங் (அப்துல் சமத்துக்குப் பதிலாக), மார்கோ ஜான்சன் (ரொமாரியோ ஷெப்பர்டுக்கு பதிலாக), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்.
தோனி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்த பிறகு, அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் 23 ரன்கள் எடுத்தார். நல்ல பார்மில் இருக்கும் தோனி அணியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் நன்றாக விளையாடுவார் என்று ரசிர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
டுவைன் பிராவோ பந்து வீச்சில் சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை கொடுக்கிறார். கடைசி மூன்று போட்டிகளிலும் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக மூன்று விக்கெட்டுகள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு அவரின் பந்துவீச்சு இன்றைய போட்டியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு அதிமகாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்