மொயின் அலி கோரிக்கையை ஏற்று மதுபான லோகோவை நீக்கிய சிஎஸ்கே
மொயின் அலி கோரிக்கையை ஏற்று ஜெர்சியில் இருந்த SNJ 10000 என்ற மதுபான நிறுவன லோகோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நீக்கியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் போது தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அண ஜெர்சியில் SNJ 10000 என்ற விளம்பர பெயரை நீக்க வேண்டும் என்ற கிரிக்கெட் வீரர் மொயீன் அலியின் கோரிக்கையை சென்னை அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்குகிறது . சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த மொயீன் அலியை, 7 கோடி இந்திய ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அணியும் ஜெர்சியில் Myntra, ASTRA Pipes, SNJ 10000 ஆகிய விளம்பர லோகோ இடம் பிடித்துள்ளன. இதில், SNJ 10000 என்பது மதுபான நிறுவனத்தோடு தொடர்புடைய விளம்பர பெர்யராகும்.
இஸ்லாமிய மார்க்கத்திலும், மது ஒழிப்பிலும் அதிக ஈடுபாடு கொண்ட மொயீன் அலி SNJ 10000 லோகோ இல்லாத ஜெர்சியை தர வேண்டும் என்று சென்னை அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை சென்னை அணி நிர்வாகம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. சூன் 18 1987 இல் பிர்மின்ஹாமில் பிறந்த மொயீன் அலி, காஷ்மீரி வம்சாவளியினைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அசாத் காஸ்மீரில் இருந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#MoeenAli Requested #CSK to remove Alcohol Brand logo from his Jersey, CSK agreed to it
— Thyview (@Thyview) April 4, 2021
Class from both Moeen & CSK ❤️#IPL2021 pic.twitter.com/5QLoLCxLu3
மொயீன் அலி கோரிக்கையை சென்னை அணி நிர்வாகம் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டதை பலரும் பாராட்டிவருகின்றனர்.