மேலும் அறிய

Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?

Beau Webster : ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் ஒரே சீசனில்  900 ரன்களுக்கு அடித்து, 30 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த பியூ வெப்ஸ்டர் இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் புத்தாண்டு டெஸ்டில் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக புதுமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அறிமுகவுள்ளார். 

யார் இந்த பியூ வெப்ஸ்டர்?

பியூ ஜேக்கப் வெப்ஸ்டர் டிசம்பர் 1, 1993 அன்று ஹோபார்ட் அருகே அமைந்துள்ள ஸ்னக் என்ற ஊரில்  பிறந்தார். வெப்ஸ்டர் என்பது ஆஸ்திரேலிய உள்நாட்டு வட்டாரங்களில் பிரபலமான பெயராகும். கிங்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்த இவர் டாஸ்மேனியாவுக்காக  U-17, U-19, U-23 கிரிக்கெட்டில் விளையடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

இதையும் படிங்க: Gautam Gambhir: கம்பீர் அல்ல, பிசிசிஐ செய்த பெரிய தவறு..! புஜாராவை கழற்றிவிட்டது யார்? BGT தொடரி தோல்விக்கான காரணம்..!

மித வேகப்பந்து வீச்சளாரான, வெப்ஸ்டர் 93 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 37.83 சராசரியுடன் 5297 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 12 சதங்கள் மற்றும் 24 அரைசதங்கள் அடங்கும். அவர் 54 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் விளையாடி 31.35 சராசரியில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்களுடன் 1317 ரன்கள் எடுத்துள்ளார். 

வெப்ஸ்டர் 93 டி20 போட்டிகளில் விளையாடி 11 அரைசதங்கள் உட்பட 26.98 சராசரி மற்றும் 118.71 ஸ்ட்ரைக் ரேட்டில் 1700 ரன்களை குவித்துள்ளார். 

31 வயதான ஆல்ரவுண்டரான இவர் 37.39 சராசரியில் 148 முதல் தர விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் மூன்று நான்கு விக்கெட்கள் மற்றும் இரண்டு ஐந்து விக்கெட்டுகள் அடங்கும். 

இதையும் படிங்க: Gautam Gambhir : ”நேர்மையாக இருக்க வேண்டும்” டிரெஸ்ஸிங் ரூம் சர்ச்சை.. மவுனம் கலைத்த கம்பீர்

கடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் ஒரே சீசனில்  900 ரன்களுக்கு மேல் எடுத்த மற்றும் 30 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார், உள்ளூர் போட்டிகளில் இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது,  இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கார்பீல்ட் சோபர்ஸ் இந்த சாதனையை படைத்தார்.

வெப்ஸ்டர் இதுவரை பிக் பாஷ் லீக்கில் (BBL) 1463 ரன்கள் குவித்து 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் பிபிஎல்லில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளை விளையாடியுள்ளார்,இந்த சீசனில் அவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணிக்கு தலைவலியாக இருப்பார்:

வெப்ஸ்டரின் ஆல்ரவுண்ட் ஆட்டத்திறன் அவரை ஆஸ்திரேலியாவுக்கு கண்டிப்பாக பலம் சேர்க்கும், பட்சத்தில் அவரது அறிமுகம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இக்கட்டான சமயங்களில் இறங்கி அதிரடியாக  ரன்களை குவிக்கும் அவரது திறமை மற்றும் 6.5 அங்குலம் உயரம் அவரது பந்துவீச்சுகும் பெரிதும் உதவும், அதே போல இந்திய அணி பேட்ஸ்மேன்கள் உயரம் அதிகமுள்ள பந்துவீச்சார்களிடம் தடுமாறுவார்கள், அதனால் வெப்ஸ்டர் இந்திய அணி பேட்டர்களுக்கு சவாலாக இருப்பார்கள்.  பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு வெப்ஸ்டர் வலு சேர்ப்பதால் இந்திய அணி இவரை எதிர்த்து ஆடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

 நாதன் மெக்ஸ்வீனி மற்றும் சாம் கான்ஸ்டாஸுக்குப் பிறகு நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் வெப்ஸ்டர் மூன்றாவது அறிமுக வீரராக இருப்பார்.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி(w), பேட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sunrisers Leeds: சன்ரைசர்ஸ் அணியில் பாக் வீரர்! நாங்க தலையிடமாட்டோம்.. காவ்யாவுக்கு சப்போர்ட் செய்த பிசிசிஐ
Sunrisers Leeds: சன்ரைசர்ஸ் அணியில் பாக் வீரர்! நாங்க தலையிடமாட்டோம்.. காவ்யாவுக்கு சப்போர்ட் செய்த பிசிசிஐ
தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget