புத்தாண்டில் தீர்மானம் எடுக்கும் பழக்கம் சிலருக்கு உள்ளது. 2025ல் உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்-ஆகவும் வைத்திருக்க நீங்கள் தீர்மானம் எடுத்திருந்தால், உங்களுக்காக சில டிப்ஸ்.

டயட்டில் சீரான உணவுமுறை பழக்கம் பெரிதும் உதவுகிறது. தினசரி உணவுகளில் சிறிது சிறிதாக மாற்றம் கொண்டுவாருங்கள்.

புரதம் அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத நேரங்களில் திண்பண்டங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

தினசரி உடற்பயிற்சியை மெதுவாக தொடங்கவும். சிறிது சிறிதாக உடற்பயிற்சி நேரத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

ஒரு வாரத்திற்கு 150 நிமிட எளிமையான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிட கடுமையான உடற்பயிற்சியோ கட்டாயம் செய்யவேண்டும் என சுகாதார வழிகாட்டுதல்கள் கூறுகிறது.

உடல் மேன்மையாக இருக்க மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒரு நாளைக்கு 5-10 நிமிடங்கள் தியானம் செய்யலாம்.

ஒழுங்கான தூக்கம் அவசியம் தேவை. தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக்கவும். தூங்க செல்லும் முன்பு நீல நிற ஒளியை பார்ப்பதை தவிர்க்கவும்.

தண்ணீர் அதிகமாக குடிக்கவும். சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் மதுபானங்களை தவிருங்கள்.