Gautam Gambhir : ”நேர்மையாக இருக்க வேண்டும்” டிரெஸ்ஸிங் ரூம் சர்ச்சை.. மவுனம் கலைத்த கம்பீர்
Border Gavaskar Trophy: பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் வீரர்களுக்கு இடையே டிரெஸ்சிங் ரூமில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது டிரஸ்ஸிங் ரூம் உரையாடல்கள் கசிந்ததாக வெளியான சர்ச்சைக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மெளனம் கலைத்து பேசியுள்ளார்.
பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்ய வேண்டிய போட்டியை படுமோசமாக பேட்டிங் ஆடி 184 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் தோல்வியடைந்தது, இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியை கடுமையான விமர்சனங்களை சந்தித்து. மேலும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் வீரர்களுக்கு இடையே டிரெஸ்சிங் ரூமில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: SL Vs Nz 3rd T20: நியூசிலாந்தை பொளந்துகட்டிய இலங்கை - குசால் பெரேரா ருத்ரதாண்டவம், 219 ரன்கள் இலக்கு
மெளனம் கலைத்த கம்பீர்:
இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைப்பெறும் செய்தியாளர் சந்திப்பு நடந்தது இதில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ” அணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது ஆதாரமற்ற வியூகங்கள் மட்டுமே, "பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையேயான விவாதங்கள் டிரஸ்ஸிங் அறையில் இருக்க வேண்டும்” என்றாஎங்களுக்குள் கடுமையான வார்த்தைகள் மற்றும் நேர்மையான உரையாடல்க இருப்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும், ஆனால் அவை பொது களத்தில் வெளியிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை, உங்களை டிரெஸ்சிங் ரூம்மில் வைத்திருப்பது உங்களின் சிறப்பான ஆட்டம் மட்டுமே என்றார் கம்பீர்.
Gautam Gambhir in the Press Conference. pic.twitter.com/FQyHYn3fg8
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 2, 2025
கோலி மற்றும் ரோகித்:
விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா குறித்து கேள்விகள் எழுப்பட்டது, அதற்கு பதிலளித்த கம்பீர்.. நான் அவர்கள் இருவரிடமும் போட்டி வியூகங்கள் மற்றும் போட்டியை எப்படி அனுக வேண்டும் என்பது குறித்து மட்டும் தான் பேசுவேன், "ஒவ்வொரு தனிநபருக்கும் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை பற்றியும் எதில் முன்னேற்றம் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்க இந்திய அணி நிச்சயம் தக்க வைப்போம் என்கிற நம்பிகை உள்ளது என்றார்.
Gautam Gambhir said, "we're confident of retaining the Border Gavaskar Trophy". pic.twitter.com/g8eS4nvs7v
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 2, 2025
நாளைய போட்டியில் கேப்டன் ரோகித் விளையாடுவாரா என்ற கேள்விக்கு மைதானத்தின் தன்மையை பொருத்தே பிளேயிங் 11 இருக்கும் என்று தெரிவித்தார் கம்பீர்.
இதையும் படிங்க: Gautam Gambhir: கம்பீர் அல்ல, பிசிசிஐ செய்த பெரிய தவறு..! புஜாராவை கழற்றிவிட்டது யார்? BGT தொடரி தோல்விக்கான காரணம்..!
ஆகாஷ் தீப் காயம்:
வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் கடினமான முதுகுவலி காரணமாக சிட்னி டெஸ்டில் விளையாடமாட்டார் என்று கம்பீர் உறுதிப்படுத்தினார். அவருக்கு பதிலாக ஹர்சித் ராணா சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது