மேலும் அறிய
Ind vs Aus Squad: முடிவுக்கு வருகிறதா ஷமி மற்றும் ஜடேஜாவின் ODI பயணம்? அணியிலிருந்து நீக்கப்பட்டதின் காரணம் என்ன?
ஆஸ்திரேலிய ஜஸ்பிரித் பும்ரா, ஹார்டிக் பாண்ட்யா உள்ளிட்ட ஐந்து நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முகமது ஷமி
1/6

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (IND vs AUS) அணிகள் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தத் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷுப்மான் கில் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, ஹார்டிக் பாண்ட்யா உள்ளிட்ட ஐந்து நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
2/6

பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதால், இந்திய ஒருநாள் அணியில் அவரது எதிர்காலம் குறித்த கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது.
3/6

ஹர்திக் பாண்ட்யாவும் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார். 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு பாண்ட்யா காயமடைந்தார், இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனது, மேலும் அவர் இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை
4/6

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஒருநாள் தொடருக்கு ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . பும்ரா டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
5/6

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஒருநாள் போட்டியில் விளையாடியது, அப்போது ஷமி இந்திய அணியில் இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடும் 11-னிலும் ஷமியும் இருந்தார், ஆனால் ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
6/6

இந்தியாவின் மிக முக்கிய வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர், ஆனால் ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. வருண் சக்ரவர்த்தி மற்றும் சாம்சன் ஆகியோர் ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணியிலும் இடம்பெற்றிருந்தனர், ஆனால் அவர்களால் ஒருநாள் அணியில் இடம் பெற முடியவில்லை.
Published at : 04 Oct 2025 10:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















