தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சல்மான் அகா ரன் அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, சல்மான் ஆகா ரன் அவுட் செய்யப்பட்ட விதம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39-வது ஓவரை மெஹ்தி ஹசன் மிராஸ் வீசிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது முகமது ரிஸ்வான் அடித்த பந்து நேராகப் பந்துவீச்சாளரை நோக்கிச் சென்றது. அந்தச் சமயத்தில் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த சல்மான் ஆகா, தனது கிரீஸை விட்டுச் சற்று வெளியே நின்றிருந்தார்.
திடீரென பந்து சல்மானின் மட்டையில் பட்டு மெஹ்தி ஹசனிடம் சென்றது. பந்து விளையாட்டில் இல்லை (Dead Ball) என்று தவறாகக் கருதிய சல்மான், அந்தப் பந்தை எடுத்துக்கொடுப்பதற்காகக் குனிந்தார். ஆனால், அவர் பந்தைத் தொடுவதற்கு முன்பாகவே மெஹ்தி ஹசன் மின்னல் வேகத்தில் பந்தை எடுத்து ஸ்டம்புகளைத் தாக்கினார். விதிகளின்படி இது ரன் அவுட் என்பதால், நடுவர் சல்மான் ஆகாவை ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
Crucial moment! Mehidy Hasan Miraz removes Salman Agha with a brilliant run-out. ⚡🏏#BCB #Cricket #Bangladesh #Pakistan #ODI pic.twitter.com/N0inKkZVwz
— Bangladesh Cricket (@BCBtigers) March 13, 2026
வங்கதேச வீரர்களின் இந்தச் செயல் சல்மான் ஆகாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மைதானத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், முதலில் கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பின்னர் தனது ஹெல்மெட்டையும் தரையில் வீசினார். டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பிய பிறகும் அவரது கோபம் குறையவில்லை; அங்கேயும் தனது பேட் மற்றும் ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்து ஆக்ரோஷமாகக் கத்தினார். இதற்கிடையில், களத்தில் இருந்த முகமது ரிஸ்வான், வங்கதேச வீரர்களுடன் இந்த ரன் அவுட் மற்றும் விளையாட்டுத் திறன் (Sportsmanship) குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது மைதானத்தில் பரபரப்பை அதிகரித்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















