T20 World Cup 2024: சூப்பர் 8ல் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் அமெரிக்கா..வெள்ளை மாளிகை வெளியிட்ட முக்கிய வீடியோ!
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அமெரிக்க அணி இன்று (ஜூன் 19) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
சூப்பர் 8 சுற்றில் விளையாட உள்ள அமெரிக்க அணிக்கு வெள்ளை மாளிகை சார்பில் வாழ்த்துக்கள் கூறப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளது.
இதில் இன்று (ஜூன் 19) நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் குரூப் 2வில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது. அதன்படி, இந்த போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட்டில் நடைபெற உள்ளது.
முதன் முறை சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா:
முதன் முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான தகுதியை பெற்ற அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதும் இதுவே முதல் முறை. இதன் மூலம் அந்த அணி ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்தது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் தான் தங்களுடைய முதல் சூப்பர் 8 சுற்றில் விளையாட உள்ள அமெரிக்க அணிக்கு வெள்ளை மாளிகை சார்பில் வாழ்த்துக்கள் கூறப்பட்டுள்ளது.
வாழ்த்திய வெள்ளை மாளிகை:
Thank you @WhiteHouse National Security Communications Adviser John Kirby for your kind words. We’ll be sure to use your encouragement as motivation for our upcoming matches in the West Indies! 💪#WeAreUSACricket 🇺🇸
— USA Cricket (@usacricket) June 18, 2024
🎥: C-SPAN pic.twitter.com/BH9U5ooH0c
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ள வீடியோவில், ”ஆமாம், அவர்களுக்கு வாழ்த்துக்கள், நான் பார்த்தேன். அவர்கள் சூப்பர் 8-ல் இருக்கிறார்கள். இது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் வெற்றிக்காக நாங்கள் அனைவரும் அவர்களை வாழ்த்துகிறோம். இது மிகப்பெரிய ஒன்று மற்றும் நாங்கள் அவர்களை உற்சாகப்படுத்துகிறோம்,"என்று கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த வாழ்த்து வீடியோவிற்கு நன்று கூறியுள்ள அமெரிக்க கிரிக்கெட் வெளியிட்டுள்ள பதிவில்,”நன்றி வெள்ளை மாளிகை உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி. உங்கள் ஊக்கத்தை வெஸ்ட் இண்டீஸில் நடக்கவிருக்கும் எங்கள் போட்டிகளுக்கு உந்துதலாகப் பயன்படுத்துவோம்” என்று கூறியுள்ளது.
அதன்படி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அமெரிக்க அணி இன்று (ஜூன் 19) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும், ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், 23 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது அமெரிக்க அணி.
மேலும் படிக்க: Watch Video: "மேன் vs வைல்ட்" புகழ் பியர் கிரில்ஸ் கிரிக்கெட்டிலும் அசத்தல்.. சிக்ஸரும், பவுண்டரியுமாக பறந்த பந்துகள்..!
மேலும் படிக்க: IND vs ZIM T20I Series: ரோஹித், ஹர்திக் இல்லை.. ஜிம்பாப்வே எதிரான தொடருக்கு கேப்டனாக ருதுராஜ்..? வெளியான தகவல்!