T20 World Cup 2024: ஐசிசியின் கெடு முடிந்தது..! இதுவரை 9 நாடுகள் வெளியிட்ட வீரர்கள் பட்டியல்.. அப்போ! மற்ற அணிகள்?
T20 World Cup 2024 All Teams: பங்கேற்கும் 20 நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்..
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பையானது வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் பிரமாண்டமாக தொடங்குகிறது.
இந்தநிலையில், மே 1ம் தேதிக்குள் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 நாடுகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதையடுத்து, 20 நாடுகளை சேர்ந்த அணிகளும் தங்களது வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்களா என்பதை இங்கே பார்க்கலாம்.
ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 முழு அணிகள் (அணி வாரியாக)
இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர் , ஆடம் ஜம்பா.
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி , மார்க் வூட்.
நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிஷெல் ரவீந்திரன் சோதி, டிம் சவுதி.
தென்னாப்பிரிக்கா அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, காகிசோ ஆர் நார்ட்ஜே, ஆர்பாடா, ஆர். தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.
ஆப்கானிஸ்தான் அணி :ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது இஷாக், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹமட், நூர் அஹமட் ஃபாரூக்கி மற்றும் ஃபரித் அகமது மாலிக்
கனடா அணி: சாத் ஜாபர் (கேப்டன்), ஆரோன் ஜான்சன், திலோன் ஹெய்லிகர், தில்ப்ரீத் பஜ்வா, ஹர்ஷ் தாக்கர், ஜெர்மி கார்டன், ஜுனைத் சித்திக், கலீம் சனா, கன்வர்பால் தத்குர், நவ்நீத் தலிவால், நிக்கோலஸ் கிர்டன், பர்கத் சிங், ரவீந்தர்பால் சிங், ரய்யான்கான் பதான், ஷ்ரேயாஸ் மொவ்வா
நேபாள அணி: ரோஹித் பவுடல் (கேப்டன்), ஆசிப் ஷேக், அனில் குமார் சா, குஷால் புர்டெல், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, லலித் ராஜ்பன்ஷி, கரண் கே.சி, குல்ஷன் ஜா, சோம்பால் கமி, பிரதிஸ் ஜி.சி, சுந்தீப் ஜோரா, அபினாஷ் போஹாரா, சாகர் தாகல், கமல் சிங் ஐரி
ஓமன் அணி: அகிப் இலியாஸ் (கேப்டன்), ஜீஷன் மக்சூத், அயான் கான், காஷ்யப் பிரஜாபதி, ஷோயப் கான், முகமது நதீம், பிரதிக் அதவலே, நசீம் குஷி, காலித் கைல், மெஹ்ரான் கான், பிலால் கான், கலீமுல்லா, ஃபயாஸ் பட், ஷகீல் அகமது, ரஃபியுல்லா.
அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 நாடுகளில் 9 நாடுகள் மட்டுமே இதுவரை தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட 11 நாடுகள் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிடவில்லை.
கடந்த டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் யார்..?
கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து, ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் நுழைகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.