(Source: ECI/ABP News/ABP Majha)
India vs Pakistan: டாஸ் வென்ற பாகிஸ்தான்..பந்து வீச்சு தேர்வு! அதிரடி பேட்டிங்கை தொடங்குமா இந்தியா?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஜூன் 9) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான்:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த போட்டிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான். அதன்படி நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
டாஸ் வென்ற பாகிஸ்தான்:
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அந்தவகையில் முதல் பேட்டிங்கை தொடங்க உள்ள இந்திய அணி அதிரடியான பேட்டிங்கை விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆடுகளம் எப்படி?
நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஆடுகளத்தில் இதுவரை இரு போட்டிகள் நடந்துள்ள நிலையில் அந்த மைதானத்தில் அதிகபட்சமே 96 ரன்கள்தான். ஆடுகளத்தின் சமனற்ற பகுதி, முறையான பராமரிப்பின்மை, தரத்தை பராமரிக்காமை ஆகியவற்றால் பேட்டர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் கதிகலங்க வைக்கிறார்கள்.
இந்த விக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசினால், எந்த இடத்தில் பந்து பிட்ச் ஆனால், எப்படிவரும், எப்படி எகிறும் என்பது தெரியாமல் கடந்த இரு போட்டிகளிலும் பேட்டர்கள் திணறினர்.
அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் பேட்டர்களின் உடலையும் இந்த ஆடுகளம் ரணமாக்கியுள்ளது. ஆதலால், இந்த ஆடுகளத்தை எவ்வாறு இரு அணிகளும் தங்களுக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப் போகிறது என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் ஷர்மா (கேப்டன்) , விராட் கோலி , ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்.) , சூர்யகுமார் யாதவ் , சிவம் துபே , ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல் , ஜஸ்பிரித் பும்ரா , முகமது சிராஜ் , அர்ஷ்தீப் சிங்
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்) , பாபர் அசாம் (கேப்டன்) , உஸ்மான் கான் , ஃபகார் ஜமான் , ஷதாப் கான் , இப்திகார் அகமது , இமாத் வாசிம் , ஷஹீன் அப்ரிடி , ஹாரிஸ் ரவுஃப் , நசீம் ஷா , முகமது அமீர்