IND vs SA T20:இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20!எங்கே?எப்படி பார்ப்பது?முழு அட்டவணை
இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடரின் போட்டிகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற உள்ளன? எந்த சேனல் மற்றும் மொபைல் செயலியில் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த நாட்டில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒயிட் வாஸ் முறையில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரின் போட்டிகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற உள்ளன? போட்டி நேரம், எந்த சேனல் மற்றும் மொபைல் செயலியில் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணனன் செயல் படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் நவம்பர் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அட்டவணை :
நவம்பர் 8 - முதல் போட்டி - டர்பன்
நவம்பர் 10 - 2வது போட்டி - கேபெர்ஹா
நவம்பர் 13 - 3வது போட்டி - செஞ்சுரியன்
நவம்பர் 15 - 4வது போட்டி - ஜோஹன்னஸ்பெர்க்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டி20 தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும். இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 தொடரை தொலைக்காட்சியில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 குழும சேனல்களில் போட்டிகளை பார்க்கலாம். மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோசினிமா செயலி மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்.
இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.
தென்னாப்பிரிக்க அணி:
ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவன் ஃபெரேரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி மபோங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், ஆண்டில் சிமெலேன், லூதோ சிபம்லா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.