மேலும் அறிய

Ind vs Aus 2nd Test: பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. 2வது போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரலையில் காணலாம்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிபெற ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்திய அணி:

முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்த போட்டியிலும், ஆஸ்திரேலிய அணியை மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும், ஜடேஜா, அக்சர் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணிக்கு உறுதுணையாக உள்ளனர். கடந்த போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா, தனது நல்ல ஃபார்மை தொடர்கிறார். கோலி, புஜாரா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் எதிரணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். புஜாராவிற்கு இது 100வது டெஸ்ட் போட்டி ஆகும். தொடர்ந்து சொதப்பி வரும் துணை கேப்டன் கே.எல். ராகுலுக்கு பதிலாக, இளம் வீரர் சுப்மன் கில்லிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய அணி:

கடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே ஆஸ்திரேலிய அணியால் சோபிக்க முடியவில்லை. இதன் காரணமாக, வார்னர், லபுசக்னே, ஸ்மித் மற்றும் கவாஜா ஆகியோர் இந்த போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியில் களமிறங்குவது ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. தனது அறிமுகப் போட்டியிலேயே இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த, சுழற்பந்துவீச்சாளர் மார்பி இந்த போட்டியிலும் கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெட் டு ஹெட்:

இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 104 முறை டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31 முறை இந்திய அணியும், 43 முறை ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 28 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இந்திய உத்தேச அணி:

ரோஹித் சர்மா(கே),  புஜாரா , விராட் கோலி , ஸ்ட்ரேயாஸ் , கேஎல் ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின் , அக்சர் படேல் , ஜடேஜா , கேஎஸ் பாரத் , முகமது சிராஜ் , ஷமி

ஆஸ்திரேலிய உத்தேச அணி:

ஸ்டீவ் ஸ்மித் , மார்னஸ் லபுசக்னே , டேவிட் வார்னர் , உஸ்மான் கவாஜா , டிஎம் ஹெட் , கேரி , பாட் கம்மின்ஸ்(கே), நாதன் லயன் , மிட்செல் ஸ்டார்க் , போலண்ட், மார்பி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget