மேலும் அறிய

IND vs AUS 1st T20 LIVE: மேத்யூ வேட் அசத்தல்.. 209 ரன்களை சேஸ் செய்து அசத்திய ஆஸி..

IND vs AUS 1st T20 LIVE Updates: இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியின் உடனுக்குடன் தகவல்கள் இதோ...

LIVE

Key Events
IND vs AUS 1st T20 LIVE: மேத்யூ வேட் அசத்தல்.. 209 ரன்களை சேஸ் செய்து அசத்திய ஆஸி..

Background

ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு நாட்டு அணியின் வீரர்களும் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பியுள்ளது நம்பிக்கை அளித்துள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா டிம் டேவிட்டிற்கு இந்த தொடர் மூலம் டி20 தொடரில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது இருநாட்டு ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறியதற்கு பிறகு இந்தியா வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் களமிறங்கும். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு பலமாக இருக்கலாம். அதேபோல், வார்னரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணி அவருக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் சிறிய ஓய்விற்கு பிறகு களமிறங்குகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜிம்பாவே மற்றும் நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கவில்லை. கடைசியாக இவர் ஜூலையில் இலங்கையில் நடைபெற்ற தொடரில் பங்கேற்றார். அதன்பின்னர் சிறிய ஓய்வை எடுத்து வந்தார். இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய தொடரில் இவர் அணிக்கு திரும்பியுள்ளார். 

இந்தநிலையில் இரு அணிகளும் இந்த தொடரை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிலாம். டி 20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் இரு அணிகளும் இந்த தொடரை தங்களுக்கு சாதமாக்கி கொள்ள திட்டமிட்டுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், நேரலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும் காணலாம். 

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா அணி விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் , புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா

ஆஸ்திரேலியா அணி விவரம்:

ஆரோன் பின்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா

23:02 PM (IST)  •  20 Sep 2022

IND vs AUS 1st T20 LIVE: மேத்யூ வேட் அசத்தல்.. இந்தியாவை வீழ்த்திய ஆஸி..

மேத்யூ வேட் அசத்தலால் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

22:07 PM (IST)  •  20 Sep 2022

IND vs AUS 1st T20 LIVE: 3வது விக்கெட்டை எடுத்த அக்சர்

ஆஸ்திரேலிய அணியின் ஜான் இங்லிஸ் விக்கெட்டை அக்சர் பட்டேல் வீழ்த்தினார்.

22:02 PM (IST)  •  20 Sep 2022

IND vs AUS 1st T20 LIVE: 14 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 145/4

14 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. 

21:59 PM (IST)  •  20 Sep 2022

IND vs AUS 1st T20 LIVE: ஒரே ரன்னில் ஆட்டமிழந்து மேக்ஸ்வேல் பெவிலியன் திரும்பினார்..

ஆஸ்திரேலிய அணியின் வீரர் மேக்ஸ்வேல் 1 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

21:43 PM (IST)  •  20 Sep 2022

IND vs AUS 1st T20 LIVE: அரைசதம் எடுத்து அசத்திய கேமரூன் க்ரீன்..அக்சர் பந்துவீச்சில் அவுட்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget