மேலும் அறிய

மும்மொழி கொள்கைக்கு ராமதாஸ் எதிர்ப்பு; மோசடி கொள்கை என விமர்சனம்

பாமகவை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை மோசடி கொள்கை - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: 2026 தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது கூட்டணி குறித்து பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும்., பாமகவை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை மோசடி கொள்கை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்.,

கடந்த ஆண்டு கரும்பு அறவை பருவம் முடிவுக்கு வந்துவிட்டது. அரசு மற்றும் தணியார் சர்க்கரை ஆலைகளால் கொள்முதல் செய்யப்படும் கரும்பின் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்துள்ளது. 3151 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்படும் என அறிவித்துள்ளது இது மத்திய அரசு அறிவித்த விலை. இது போதாது. திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன்னுக்கு நான்கு ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது ஆனால் திமுக செயல்படுத்தவில்லை. கரும்பு டன்னுக்கு கொள்முதல் விலையை ஐந்தாயிரமாக வழங்க வேண்டும்.

விவசாய மின் பயன்பாட்டை கணக்கிட சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளான்மைக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை படிப்படியாக் நிறுத்த வழி வகுக்கும் என கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேளான் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடாது. மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு அதனை இலவச மின்சாரத்தை பறிக்க முயலக்கூடாது. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ள மத்திய அரசு இந்த விவகாரத்தில் அஞ்சுவது ஏன்.

தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தமாட்டோம் என உறுதியாக கூற வேண்டும். விவசாயிகள் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படுவதை தடுக்க வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்துவிட்டது. கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் மின் வெட்டு செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் அரைமணி நேரம் மின் வெட்டு தொடர்வதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மின் வெட்டால் மாணவ, மாணவிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இப்போது மாலை நேரத்தில் மூன்றாயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும், மார்ச் மாதத்தில் 4,297 மெகா வாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின் வாரியம் கூறியுள்ள்ளது. இனி வரும் காலங்களில் மின் தடை ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்.

தொகுதி மறு வரையறை தொடர்பாக திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர் ராமதாஸ்:

அக்கூட்டத்தில் எங்கள் கட்சியின் தலைவர் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். 

எங்களைப் பொறுத்தவரையில் முன்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இரு மொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒரு மொழிக் கொள்கையை உன்னத கொள்கை என தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர் ராமதாஸ் 2026 தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது பொதுக்குழுவை கூட்டி பாமக கூட்டணி குறித்து முடிவு செய்யும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திரண்ட தொண்டர்கள்!
உளுந்தூர்பேட்டையில் விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திரண்ட தொண்டர்கள்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget