WI T20 World Cup : பிராவோ, கெயில், பொல்லார்ட், ரஸல், நரைன்..! முதன்முறையாக 5 பேரும் இல்லாமல் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்..!
உலககோப்பை டி20 தொடரில் முதன்முறையாக பொல்லார்ட், பிராவோ, ரஸல், கெயில் மற்றும் சுனில் நரைன் 5 பேரும் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.
கிரிக்கெட் போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட டி20 போட்டிகளுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலககோப்பை டி20 போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பு டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகமும் அறிவித்து வருகிறது. இந்த நிலையில், உலககோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
நிகோலஸ் பூரண் தலைமையிலான இந்த அணியில் இளம் வீரர்கள் கொண்ட படையே இடம்பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர்களான ரஸல், சுனில் நரைன் இருவரும் அணியில் இடம்பெறவில்லை. இதன்மூலம், உலககோப்பை டி20 தொடர் தொடங்கியது முதல் உலககோப்பை டி20-களில் ஆடி வந்த பிராவோ, பொல்லார்ட், கிறிஸ் கெயில், ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகிய 5 பேரும் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்கும் முதல் உலககோப்பை டி20 போட்டித் தொடர் இதுவாகும்.
2022 will be the first T20 World Cup without either of Bravo, Pollard, Gayle, Russell or Narine 🚫
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 15, 2022
End of an era pic.twitter.com/smKA1roADF
சிக்ஸர் மன்னன், யுனிவர்சல் பாஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கெயில் 2007, 2009, 2010, 2012, 2014, 2016 மற்றும் 2021 ஆண்டுகள் நடைபெற்ற அனைத்து உலககோப்பை டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். ஆல் ரவுண்டர் பிராவோ 2007, 2009, 2010, 2012, 2014, 2016 மற்றும் 2016 என இதுவரை நடைபெற்ற அனைத்து உலககோப்பை போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
மற்றொரு ஆல்ரவுண்டர் பொல்லார்ட் 2009, 2010, 2012 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலககோப்பை போட்டித் தொடரில் பங்கேற்றுள்ளார். ஆல்ரவுண்டர் ரஸல் 2012, 2014, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலககோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சுனில் நரைன் 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலககோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடியான பல தருணங்களில் மேற்கண்ட 5 பேரும் அபாரமாக ஆடி வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் ஒரு சேர உலககோப்பை டி20 அணியில் இடம்பெறாதது இதுவே முதன்முறை என்பதால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க : Andre Russell - Sunil Narine : உலககோப்பையில் சுனில் நரைன், ரஸல் இடம்பெறாதது ஏன் தெரியுமா..? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!
மேலும் படிக்க : ஊன்றுகோல் வைத்து நடக்கும் ஜடேஜா… புகைப்படத்துடன் வெளியிட்ட புதிய அப்டேட்… உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்!