மேலும் அறிய

Virat Kohli: "அந்த பாட்ஷா பைலை எடுங்க" ஆஸ்திரேலியாவில் கோலி செஞ்ச சம்பவம் அப்படி!

Border Gavaskar Trophy 2024: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை விராட் கோலி படைத்த சாதனைகள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

உலகில் சில கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடர் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு நிகரான எதிர்பார்ப்பை இந்தியா – ஆஸ்திரேலிய தொடர் உருவாக்கியுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல வேண்டும், நியூசிலாந்துக்கு எதிரான 3-0 என்ற தோல்வி, முன்னணி வீரர்களின் சொதப்பல் ஃபார்ம் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.

ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன்கில், ரிஷப்பண்ட், சர்பராஸ்கான், படிக்கல், ஜோரல், அபிமன்யு ஈஸ்வரன் என பேட்டிங்கிற்கு பலர் இருந்தாலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சவால் அளிக்க முடியும். ஏனென்றால் அனுபவமும், திறமையும் மிகுந்த இவர்களையே இந்திய அணி நம்பியுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் கோலி:

குறிப்பாக, ரோகித் சர்மாவை காட்டிலும் விராட் கோலி தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஏனென்றால், ஆஸ்திரேலியாவில் விராட் கோலி படைத்த சாதனைகள் அப்படிப்பட்ட சாதனைகள் ஆகும். ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை இந்தியாவிற்காக வென்று கொடுத்த கேப்டன் விராட் கோலி ஆவார்.

விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் மிக மிக பிடித்த மைதானங்கள் ஆகும். அடிலெய்ட், சிட்னி, மெல்போர்ன் என ஒவ்வொரு மைதானமும் விராட் கோலியின் சாதனைகளை தாங்கி நிற்கும் மைதானம் ஆகும். விராட் கோலி இதுவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 25 டெஸ்ட் போட்டிகளில் 44 இன்னிங்சில் ஆடி 8 சதங்கள், 5 அரைசதங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 42 ரன்கள் எடுத்துள்ளார். 3 முறை ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக டக் அவுட்டாகியிருந்தாலும், ஒரு முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

6 சதங்கள்:

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விராட் கோலியின் பேட்டிங் சராசரி 47.49 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 52.41 ஆகவும் வைத்துள்ளார். அதிகபட்சமாக 186 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் மட்டும் விராட் கோலி இதுவரை 25 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ளார். அதில் 1352 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 54.08 வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விராட் கோலி அடித்த 8 சதங்களில் 6 சதங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்டது ஆகும்.

விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக இருந்தாலும் அவர் பார்டர் கவாஸ்கர் டிராபி மூலமாக மீண்டும் தனது கம்பேக்கைத் தருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், லயன் என ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அனைவரையும் விராட் கோலி ஏற்கனவே அவர்களது சொந்த மண்ணிலே பதம் பார்த்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரும் விராட் கோலியே ஆவார்.

இதனால், இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியினரின் முழு கவனமும் விராட் கோலி மீதே அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் விராட் கோலியை பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். இந்த தொடர் மூலம் தனது கம்பேக்கைத் தருவதுடன் இந்திய அணிக்கும் மிகப்பெரிய கம்பேக்கை விராட் கோலி தருவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
Embed widget