Watch Video: பதக்கம் வெல்வதே இலக்கு...! ஜிம்னாஸ்டிக் வீரர் யோகேஷ்வர்சிங் தீவிர ப்ராக்டீஸ்..!
Commonwealth Games 2022 : காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் யோகேஷ்வர்சிங் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், கிரிக்கெட், நீச்சல் என பல பிரிவுகளில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த நிலையில், ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் சமீபகாலமாக இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஒலிம்பிக் தொடரிலே ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியாவின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டும் பதக்கத்தை கைப்பற்ற முடியவில்லை.
Indian Gymnasts 🤸♂️🤸♂️ hard practice ahead of their event scheduled to begin in some time
— SAI Media (@Media_SAI) July 29, 2022
Take a look at Yogeshwar's practice session 👇
Stay tuned for more!! #Cheer4India #IndiaTaiyaarHai #India4CWG2022@PMOIndia @ianuragthakur @NisithPramanik @WeAreTeamIndia pic.twitter.com/tZtS21PQdS
இந்தநிலையில், நடப்பு காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்தியா சிறப்பாக செயல்படும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்தியாவின் சார்பில் காமன்வெல்த் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் மகளிர் அணியில் பிரனதி நாயக், பிரோதிஷ்டா சமந்தா மற்றும் ருதுஜா நடராஜ் ஆகியோர் மகளிர் அணி சார்பில் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கியுள்ள யோகேஷ்வர்சிங், சையிப் தம்போலி மற்றும் சத்யஜித் மோண்டல் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஆண்கள் பிரிவின் சார்பில் களமிறங்கியுள்ள யோகேஷ்வர் சிங் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இடர் கடந்த 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில் இவர் 14வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால், நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பதக்கத்தை கைப்பற்ற வேண்டும் என்று யோகேஷ்வர்சிங் தீவிரமாக விளையாடி வருகிறார்.
யோகேஷ்வர் சிங் இதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : Commonwealth Games 2022: டேபிள் டென்னிசில் அபாரம்..! முதல் குரூப் போட்டியில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா..!
மேலும் படிக்க : AUS-W vs IND-W T20: காமன்வெல்த்தில் முதல் முறையாக களமிறங்கும் கிரிக்கெட்.. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டாஸ் வென்று இந்தியா பேட்டிங்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்