Commonwealth Games 2022: டேபிள் டென்னிசில் அபாரம்..! முதல் குரூப் போட்டியில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா..!
Commonwealth Games 2022 Table Tennis: காமன்வெல்த் தொடரில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி முதல் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடக்கப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின.
முதல் சுற்றில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிய இந்த போட்டி மதியம் 2 மணியளவில் தொடங்கியது. இந்திய அணி இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். குறிப்பாக, மணிகா பத்ரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் டென்னிசன் மற்றும் அகுலா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்கம் முதல் ஆதிக்கத்தை செலுத்தி வந்த டென்னிசனும், அகுலாவும் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் எட்வர்ட்ஸ் மற்றும் படேலை 3-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினர்.
இரண்டாவது ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ராவும், தென்னாப்பிரிக்காவின் கலாமும் மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய மணிகா பத்ரா எதிரணி வீராங்கனைக்கு வாய்ப்புகளே அளிக்காமல் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அகுலாவும், தென்னாப்பிரிக்காவின் படேலும் மோதினர். இந்த போட்டியிலும் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இதனால், இந்திய 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்திய அணி அடுத்து மாலை நடைபெறும் அடுத்த சுற்று போட்டியில் தெற்கு பிஜியுடன் மோதுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்