மேலும் அறிய
Advertisement
800 ஆண்டுகள் பழமையான லட்சமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா
800 ஆண்டுகள் பழமையான லட்சமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா.ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது இந்த கோவிலின் முக்கிய சிறப்பாக இரு ஆஞ்சநேயர் சாமி உள்ளது.சனிக்கிழமை தோறும் நன்னிலம் மட்டுமல்லாது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.கடந்த எட்டாம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய இந்த குடமுழுக்கு விழா மூன்று கால யாக பூஜை நிறைவுற்று இன்று காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்று மகா பூர்ணாகதி நடைபெற்றது.மேலும் அதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித கடங்களை தலையில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வந்தனர். கடங்கள் மீது மலர்களையும் பொறியையும் தூவி பக்தர்கள் வழிபட்டனர்.
இதனையடுத்து கடங்கள் விமான கோபுரத்தை அடைந்த பின்பு கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க கடங்களில்ல் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் ஆலயத்திற்கு வந்திருந்தவர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் நன்னிலம் மட்டுமல்லாது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் இந்த குடமுழுக்கு விழாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 800 ஆண்டுகள் மிகவும் பழமையான லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது இந்த கோவிலின் முக்கிய சிறப்பாக இரு ஆஞ்சநேயர் சாமி உள்ளது, சனிக்கிழமை தோறும் நன்னிலம் மட்டுமல்லாது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்து வருவது வழக்கம் அவ்வாறு சிறப்புமிக்க இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
கடந்த எட்டாம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது மேலும் இன்று நான்காம் கால யாக பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க மகா பூர்ணகிரி நடைபெற்றது மேலும் அதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க படங்கள் புறப்பட்டு ஆலயத்தில் சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து பின்னர் கோபுர கலசத்திற்கு மந்திரங்கள் சொல்லி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த கும்பாபிஷேக விழாவில் நன்னிலம் மட்டுமல்லாது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion