பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு 200 கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பௌர்ணமியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 200 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மணிஅம்மன் கோபுரம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயனுடன் பக்தர்களின் பாதுகாப்பு குறித்தும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுதுவதற்கும், வழிவகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பௌர்ணமி ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு 01.08.2023 அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.00 முடிவடைய உள்ளதை தொடர்ந்து ராஜகோபுரம், அம்மணிஅம்மன் கோபுரம், பேகோபுரம். திருமஞ்சன கோபுரம். ஆகிய நான்கு கோபுர நுழைவாயிலிலும் பக்தர்களுக்கு இடையூறுயில்லாமல் இலவச சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்தின் அலுவலர்கள் மற்றும் தன்னார்வர்லர்களை கொண்டு பக்தர்கள் வரிசையில் செல்ல கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்
மேலும் காவல்துறையினர்கள் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் காவல் துறையை ஈடுபடுத்த வேண்டும். அனைத்து கண்காணிப்பு கோமாரக்களையும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் வேண்டும். அதுமட்டுமில்லாமல் வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி ஆகிய துறை அலுவலர்களை கொண்டு 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் 14 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெறும் பணிகளை மேற்பார்வை செய்ய வேண்டும். கிரிவலப்பாதையில் வரும் பக்தர்களுக்கு அங்காங்கே குடிநீர் வசதி அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை தூய்மையாக பாரமரித்து உடனுக்குடன் கழிவறைக்கு தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும். குப்பை தொட்டிகள் நிரம்பினால் உடனுக்குடன் குப்பைகளை தனியாக எடுத்து அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.
பௌர்ணமியை முன்னிட்டு 200 கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கம்
மேலும் அன்னதானம் நடைபெறும் இடம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே செயல்பட வேண்டும். தற்போது நடைபெற உள்ள பௌர்ணமியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 200 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் சி. ஜோதி. அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவாணந்தம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி. திருவண்ணாமலை வட்டாட்சியர் சரளா, மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.