தீய சக்திகளால் வீட்டில் பிரச்னையா.. தீர்வு தரும் நெய் விளக்கு வழிபாடு!
விளக்கில் இருந்து இருள் நீங்கி ஒளி பிரகாசிப்பது போல நம்முடைய வாழ்க்கையிலும் துன்பம், கவலை போன்ற எதிர்மறை இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும் என்பது நமது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்து மதம் என்பது பல விதமான இறை வழிபாடு மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையவை. அப்படியான நிலையில் நம்முடைய வீட்டின் பூஜையறையின் தினமும் விளக்கேற்றி வழிபடுவது என்பது இருக்கும்.
இத்தகைய விளக்குகளை நெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவை பயன்படுத்தி ஏற்றுவோம். விளக்கில் இருந்து இருள் நீங்கி ஒளி பிரகாசிப்பது போல நம்முடைய வாழ்க்கையிலும் துன்பம், கவலை போன்ற எதிர்மறை இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும் என்பது நமது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் தினமும் வீட்டில் நெய் தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றிப் பார்க்கலாம்.
ஆழமான நம்பிக்கை
நெய் விற்கும் விலைக்கு அதனை தினமும் ஏற்றுவது என்பது பல பேர் வீடுகளில் சாத்தியமில்லை என்றாலும் வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமையிலாவது அதனை செய்வார்கள். கோயில்களுக்கு சென்றாலும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆனால் சாஸ்திரத்தைப் பொறுத்தவரை நெய் தீபம் தினமும் ஏற்றுவது அது ஆத்மார்த்தமான, ஆழமான நம்பிக்கையை கொண்டிருக்கிறது.
ஒரு அறையில் விளக்கேற்றினால் எந்த மாதிரியான பிரகாசம் உண்டாகுமோ அந்த அளவுக்கு நம்முடைய மன தூய்மையும், மன நிலையும் மேம்படும் என நம்பப்படுகிறது. இதனால் நீங்கள் வாழும் இடம் அமைதியின் சிகரமாக திகழும்.
நெய் சுடரில் உருகும்போது அது நாம் இருக்கும் இடத்தின் அமைதி மற்றும் சமநிலையை உருவாக்கும் என நம்பப்படுகிறது. பலர் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரத்தில் நெய்தீபம் ஏற்றுகிறார்கள். அது மனக்குழப்பம், குறிப்பிட்ட விஷயங்களில் முடிவெடுப்பதற்கு சிரமமாக இருக்கும் பிரச்னைகள் ஆகியவற்றை முடிவுக்கு வரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
தினமும் நெய் தீபம் ஏற்றுவதால் நம்முடைய வீட்டில் படிப்படியாக செல்வ வளம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீட்டில் தொடர் பிரச்னை இருந்தால் இதனை வீட்டின் நடுவில் ஏற்றி வைக்கலாம். வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவ வேண்டுமானால் இதனை பின்பற்றலாம். ஒருவேளை வீட்டில் நெய் தீபம் ஏற்றும் சூழல் இல்லாவிட்டால் அருகிலுள்ள கோயிலுக்கு செல்லலாம்.
ஒருவேளை கோயிலில் மட்டுமே தீப வழிபாடு செய்பவர்கள் சென்றால் சக்கரத்தாழ்வார் சன்னதியில் தினமும் நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு 48 நாட்கள் வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றம், வியாபாரத்தில் வளர்ச்சி ஆகியவை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல் கோயிலில் விளக்கேற்றினால் அந்த சன்னதியை மூன்று முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். மண்ணாலான அகல் விளக்கில் ஏற்றுவது இன்னும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. செவ்வாய்கிழமையில் நெய் தீபம் ஏற்றினால் பில்லி சூனியம் போன்ற தீய எண்ணங்கள் கொண்ட பிரச்னைகள் விலகும் என்பது ஐதீகமாகும்.





















