மேலும் அறிய

காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொன் தந்த இறைவன் அருள்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

"காஞ்சிபுரம் ஓணகாந்தன் தளி (ஓணகாந்தேஸ்வரர்) திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று‌ வெகு விமர்சையாக நடைபெற்றது."

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் வீற்றிருக்கும், ஓணகாந்தன் தளி எனப்படும் ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவிலில் இன்று கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இத்திருக்கோவில் சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் மற்றும் ஜலந்தரேஸ்வரர் என மூன்று சுயம்பு லிங்கங்கள் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றன.

கோவிலின் தல வரலாறு என்ன?

சுந்தரர் இத்தல இறைவனிடம் பொன் கேட்டபோது, இறைவன் இங்குள்ள புளிய மரத்தின் பழங்களைத் தங்கமாக மாற்றிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. வறுமை நீங்கவும், செல்வம் பெருகவும் பக்தர்கள் இங்கு வழிபடுவது வழக்கம். 

இக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஸ்ரீ கணபதி பூஜை,ஸ்ரீ நவகிரக ஹோமம்,தன பூஜை,கோ பூஜை மற்றும் நான்கு கால யாகபூஜைகளுடன் மஹா பூர்ணாஹுதி நிறைவுற்று,பின் மேளத் தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க,மங்கள் இசை இசைக்க,பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் யாக சாலையிலிருந்து புறப்பாடாகி,கோபுர கலசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா

பின்னர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் "பக்தி முழக்கங்களுடன் மூலவர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டும்,பின் அனைத்து விமானங்கள் மூலஸ்தானம்,பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களின் மீதும் கும்பாபிஷேக நீரானது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget