மேலும் அறிய
வண்ணங்கள் ஜொலிக்கும் மெகா சைஸ் விநாயகர் சிலை.. மதுரை கிளிக்ஸ் இது !
மதுரையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சிலை சிற்பக்கூடங்களில் இருந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றனர்.
விநாயகர் சிலை
1/8

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்துவதற்காக 3 அடி முதல் 15 அடி வரையிலான வித விதமான விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்று இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர்.
2/8

விநாயகர் சிலைகளை எடுத்து செல்லும் முன்பாக விற்பனை கூடத்தில் இருந்த காவல்துறையினர் சிலை கொண்டு செல்லப்படும் பகுதி, சிலை அமைக்கப்படும் பகுதி ,யார் மூலமாக சிலை வைக்கப்படுகிறது, எத்தனை அடி உயரம், தொலைபேசி எண் உள்ளிட்ட முழு விவரங்களை கேட்ட பின்பாக அந்தந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
3/8

விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதிலும் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்ட முழுவதும். விநாயகர் சிலைகளை தங்களது வீடுகளிலும் பொது இடங்களிலும் வைத்து வழிபாடு நடத்துவதற்கான ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வாங்கிசெல்கின்றனர்.
4/8

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநிலத்தவர் கடந்த ஒரு வருடமாக பணி செய்து உருவாக்கிய விநாயகர் சிலை விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சியடைந்தாலும் கூட அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு விட விற்பனை குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.
5/8

ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளில் விநாயகர் சிலைகளை ஏற்றி புறப்பட்டு சென்றனர்.
6/8

விநாயகர் சிலை வாங்கிய பின் சூடம் ஏற்றி வழிபட்ட இளைஞர்கள்.
7/8

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மூலமாக நடத்தப்படும் சிலை விற்பனை கூடத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
8/8

சிவதாண்டவ விநாயகர், காமதேனு விநாயகர் என பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட சிலைகளை மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களும் வாங்கிசெல்கின்றனர்.
Published at : 26 Aug 2025 09:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















