மேலும் அறிய

Annamalaiyar Temple: அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம்.. பிறம்மோற்சவ கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்..!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா அம்மன் சன்னதி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் நடைப்பெறவுள்ளது.

பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. அண்ணாமலையார் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையில் 12 மாதங்களும் உற்சவம் நடைபெறும். அதேபோன்று ஆண்டுக்கு நான்கு முறை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் நடைபெறும்.கார்த்திகை தீபத் திருவிழா உற்சவம், ஆனி பிரம்மோற்சவம் உற்சவம், மார்கழி மாதத்தில் உத்ராயண புண்ணியகாலம் உற்சவம் மற்றும் ஆடி பூரம் உற்சவம் ஆகியவற்றை நடைபெறும். அதில் மூன்று கொடியேற்றம் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றமும் ஒரு கொடியேற்றம் உண்ணமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்படும், ஜோதிட ரீதியாக ஆடி மாதம் சந்திரன் வீடான கடக ராசிக்கு சூரியன் வரும் காலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

Annamalaiyar Temple: அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம்.. பிறம்மோற்சவ கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்..!

மேலும் சூரியன் தென் திசை நோக்கி இந்த மாதத்தில் தான் பயணத்தை தொடங்கும். அதன்படி இந்த மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, செவ்வாய் மற்றும் பௌர்ணமி, பூரண நட்சத்திர அமாவாசை, ஆடி 18 ஆகிய நாட்களில் அம்மன் கோவில்களில் வழிபடுவது புனிதமாக கருதப்படுகிறது. இதனால்தான் கிராமப்புறங்களில் கூழ் வார்த்தால், பூ கரகம் எடுத்தல், தீமிதி திருவிழா வழிபாடுகள் நடைபெறும்இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலில் தனி சன்னதியாக எழுந்தருளிய உண்ணாமுலை அம்மன் சன்னதியில் அருகே உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழாவினை முன்னிட்டு சனிகிழமை அதிகாலையில், 5;30 மணிக்கு மேல் 6;45 மணிக்குள் கடக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் மந்திரங்கள் முழுங்க கொடியேற்றும் விழா நடைபெறும்.

Annamalaiyar Temple: அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம்.. பிறம்மோற்சவ கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்..!

அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடைபெறும். அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோயில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அண்ணாமலையார் கோயிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget