மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை - வசூல் நிலவரம் இதோ
விழுப்புரம் : மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தை மாத அமாவாசை தினத்தில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக 94 லட்சத்து 26 ஆயிரத்து 780 ரூபாய் வரப்பெற்றது.
விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தை மாத அமாவாசை தினத்தில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக 94 லட்சத்து 26 ஆயிரத்து 780 ரூபாய் வரப்பெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் அம்மாவாசை தினம் தோறும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் தை மாத அமாவாசை தினத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்த நிலையில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்க பணம், தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பக்தர்கள் உண்டியலில் நேர்த்திக் கடனாக செலுத்திய ரொக்க பணம், தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை எண்ணினர். வளத்தி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிவில் 94.லட்சத்து 26.ஆயிரத்து 780 ரூபாய் பணமும், 221 கிராம் தங்கமும், 953 கிராம் வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்