மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
IPL 20223 : விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் மக்களை பொங்க வைத்த நேற்றைய ஐ.பி.எல் ஆட்டங்கள்!
யாரும் எதிர்பார்த்திராத வகையில் கொல்கத்தா அணியின் ரிங்கு ஷிங் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.
ஐபிஎல் 2023
1/6

ஐ.பி.எல் 2023இன் புள்ளிப்பட்டியலில் முன்னேற அணிகள் தங்கள் ஆட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
2/6

இந்நிலையில் நேற்று (09/04/2023) இரண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடைப்பெற்றன. முதலாவதாக, குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
3/6

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி, 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து பேட்டிங் ஆட வந்த கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணியின் நிலைமை மோசமானது.
4/6

கடைசி ஓவரில் 29 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் கொல்கத்தா அணியின் ரிங்கு ஷிங் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.
5/6

இரண்டாவது ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பவுலிங்கை தேர்வு செய்ய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். வந்த வேகத்தில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் திரும்பி செல்ல, ஓப்பனராக களமிறங்கிய ஷிகர் தவான் மட்டும், அவுட்டாகமல் 66 பந்துகளில் 99 ரன்களை குவித்து இலக்கை 143 வரை கொண்டு சென்றார்.
6/6

அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் ராகுல் திரிப்பாதி 74*(48) மற்றும் கேப்டன் ஐடன் மார்க்ரம் 37*(21) சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பெற செய்தனர். இதன் மூலம் ஐ.பி.எல் 2023இல் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் அணி.
Published at : 10 Apr 2023 12:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
க்ரைம்
Advertisement
Advertisement





















