மேலும் அறிய
Black Salt: இந்துப்பு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க!
ஹிமாலயன் உப்பு அல்லது பிங்க் சால்ட் என்றழைக்கப்படும் இந்துப்பை நம்மில் சிலர் அறிந்திருப்போம். இந்த இரண்டு உப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
உணவு
1/5

பொதுவாக ஏராளமானோர் வீடுகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்பட்டது. இது ஆலைகளில் சுத்தம் செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன.
2/5

ஹிமாலயன் உப்பு இந்திய துணை கண்டத்தில் உள்ள புதையல் என்று சொல்லப்படுகின்றது. இது அதன் தனித்துவமான நிறம் மற்றும் கந்தக வாசனைக்கு பெயர் பெற்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எரிமலை பகுதிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்துப்பு ஒரு தனித்துவமான உற்பத்தி செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றது.
3/5

இந்துப்பு ஒரு வித்யாசமான, விரும்பும்படியான சுவையை கொண்டிருக்கும். அதே நேரத்தில் இது ஒரு தனித்துவமான, காரமான மற்றும் சற்று கசப்பான சுவையை கொண்டுள்ளது. இந்த வித்யாசமான சுவை காரணமாக பாரம்பரிய இந்திய மற்றும் தெற்காசிய உணவு வகைகளில் இந்துப்பு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.அதிக சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், இருதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது.
4/5

இந்துப்பு, ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சல்ஃபர் செரிமானத்திற்கு உதவுவதாகவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், வீக்கத்தை போக்குவதாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும், மற்ற உப்பைப் போலவே, இந்துப்பை மிதமாகப் பயன்படுத்துவது அவசியம்.
5/5

உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் பல்வேறு உப்புகளில் எது ஆரோக்ய நலனுக்கு உகந்தது என்பதை அறிந்து அல்லது மருத்துவரை ஆலோசித்து பயன்படுத்தலாம்.
Published at : 22 Jul 2024 04:36 PM (IST)
மேலும் படிக்க





















