மேலும் அறிய

Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..

Made in India Cars: உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு இந்திய aஅட்டோமொபைல் சந்தையை புரட்டிப் போட்ட 5 கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Made In India Cars: உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

இந்திய சந்தைக்கு வெத போட்ட 5 உள்ளூர் கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்றைய கார் பிரிவின் நிலையானது, வெறும் உலோகம், இன்ஜின் மற்றும் சக்கரங்களால் மட்டுமே வடிவமைக்கப்பட்டது கிடையாது. ஆசை, மலிவு விலை, அணுகல், பெரும் கனவு மற்றும் பேராசைகளை உள்ளடக்கியது. கடந்த நான்கு தசாப்தங்களில் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட சில கார்கள் அதிகப்படியான விற்பனையை பதிவு செய்ததோடு நிற்காமல், இந்தியர்கள் எப்படி பயணிக்க வேண்டும், யோசிக்க வேண்டும் மற்றும் வாழ வேண்டும் என்பதையும் தீர்மானித்தன. அந்த வகையில் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு இந்திய கார் பிரிவில் மிகப்பெரிய புரட்சியையும், அடுத்த கட்டத்தை நோக்கிய முன்னேற்றத்தையும் வழங்கிய டாப் 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.  

 

உள்ளூர் சந்தையை புரட்டிப்போட்ட 5 மாடல்கள்:

1. மாருதி சுசூகி 800

1983 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி 800, இதற்கு முன்பு வேறு எந்த ஒரு காரும் செய்யாத ஒன்றை இந்த மாடல்செய்தது. நடுத்தர மக்களும் காரை சொந்தமாக வாங்க முடியும் என்பதை கள எதார்த்தமாக மாற்றியது. அதுவரை, கார் என்றாலே பருமனான அம்பாசிடர் அல்லது பிரீமியர் பத்மினி ஆகிய,  இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாக மட்டுமே இருந்தது. அவை விலை உயர்ந்தவை மற்றும் இயக்குவதற்கான செலவுகளும் அதிகமாக இருந்தது. மாருதி 800 காரானது சிறியதாகவும், எரிபொருள் திறன் கொண்டதாகவும், பராமரிக்க எளிதானதாகவும், மிக முக்கியமாக மலிவு விலையிலும் இருந்தது. இது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் அதிகம் விற்பனையாகும் காராக கோலோச்சியது, தனிநபர் கார் பயன்பாட்டினை மறுவரையறை செய்தது. அறிமுகத்தின் போது 47 ஆயிரத்து 500 ரூபாய் என்ற விலையை கொண்டிருந்த மாருதி 800, 2014ம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்டப்போது சுமார் ரூ.2.42 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது.


Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..

2. மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ 

கடந்த 2002ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ மாடலனாது, மஹிந்த்ரா நிறுவனத்தின் இமேஜையே மாற்றி அமைத்தது. அதுநாள் வரையில் எஸ்யுவி என்பது மிகவும் மிகவும் விலையுயர்ந்த இறக்குமதி வாகனங்களாகவோ அல்லது அடிப்படை பயன்பாட்டு வாகனங்களாவோ மட்டுமே இருந்தன. ஸ்கார்ப்பியோவின் துணிச்சலான வடிவமைப்பு, கம்பீரமான சாலை தோற்றம் மற்றும் மலிவு விலை மூலம் வாடிக்கையாளர்களை எஸ்யுவியை நோக்கி இழுத்தது. இது கிராமப்புற வாங்குபவர்களையும் நகர்ப்புற பயனர்களையும் சமமாக கவர்ந்தது. SUV-க்களை ஆர்வமானதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றிய பெருமை ஸ்கார்ப்பியோவையே சேரும். இந்த கார் 2002ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்போது ரூ.5.50 லட்சம் தொடங்கி ரூ.5.99 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது.


Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..

3. டாடா இண்டிகா

1998 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் இண்டிகாவை அறிமுகப்படுத்திய நிகழ்வானது, காலப்போக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக மாறிப்போனது. காரணம், இது முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பயணிகள் கார் ஆகும். உள்ளூர் நிறுவனத்தாலும் புதியதாக ஒரு காரை வடிவமைத்து தயாரிக்க முடியும் என்பதை டாடா நிரூபித்தது. இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பாக்கும் இடம், எரிபொருள் திறன் மற்றும் மதிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இண்டிகா வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன் டீசல் வகை மிகவும் பிரபலமடைந்தது, குறிப்பாக டாக்ஸி ஆபரேட்டர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சந்தைப்படுத்தப்பட்டபோது இந்த காரின் விலை ரூ.2.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 20 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டபோது, விலை வரம்பானது ரூ.4 லட்சம் தொடங்கி ரூ.6 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.


Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..

4. டாடா நானோ

2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ, வணிக ரீதியாக வெற்றிபெறாமல் போகலாம். ஆனால் அதன் தாக்கம் விற்பனையைத் தாண்டிச் சென்றது. "உலகின் மலிவான கார்" என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்ட இந்த மாடல், இரு சக்கர வாகனங்களிலிருந்து பாதுகாப்பான நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பதற்கான வாய்ப்பை குடும்பங்களுக்கு வழங்கியது. நானோ இந்தியாவின் சிக்கனமான பொறியியல் திறனை வெளிப்படுத்தி, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சந்தையில் விற்பனை நிலவரம் கலவையாக இருந்தபோதிலும், உலகளாவிய வாகன உற்பத்தியாளர்கள் குறைந்த விலை கார் மேம்பாடு பற்றி, எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதை நானோ எடுத்துக்காட்டியது. இதன் தொடக்க விலை வெறும் ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது.



Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..

5. இந்துஸ்தான் அம்பாசிடர்

போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் சிறிய ஹேட்ச்பேக்குகள் சந்தைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்துஸ்தான் அம்பாசிடர் கார் மாடல் விற்பனையில் இருந்தது. 1957 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட இந்த கார், தலைமுறை தலைமுறையாக இந்திய சாலைகளை ஆண்டது. பிரிட்டிஷ் மோரிஸ் ஆக்ஸ்போர்டை அடிப்படையாகக் கொண்ட இந்த அம்பாசிடர், அரசியல்வாதிகள், அதிகாரிகள், டாக்ஸி ஆபரேட்டர்கள் மற்றும் பெரிய குடும்பங்களால் விரும்பப்பட்டதோடு, அதிகாரம் மற்றும் மரியாதையின் அடையாளமாக மாறியது. அதன் அதிகப்படியான இட வசதி, மென்மையான சஸ்பென்ஷன் மற்றும் கரடுமுரடான கட்டுமானம் இந்தியாவின் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றதாக அமைந்தது. மாற்று வாய்ப்புகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் விற்பனையானதால், இந்த காரை கொண்டிருப்பது பெருமையானதாகவும் கருதப்பட்டது. 


Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..

சுமார் 15 ஆயிரம் தொடங்கி 16 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் தொடங்கிய அம்பாசிடர் மாடலானது, 2014ம் ஆண்டு உற்பத்தி கைவிடப்பட்டபோது, ரூ.4.21 லட்சம் தொடங்கி ரூ.5.22 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டிருந்தது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பட்ஜெட் விலையில் ஒரு 'மாஸ்' பைக்! டிவிஎஸ் ஸ்போர்ட் vs பஜாஜ் பிளாட்டினா - எதை வாங்கினால் லாபம்?
பட்ஜெட் விலையில் ஒரு 'மாஸ்' பைக்! டிவிஎஸ் ஸ்போர்ட் vs பஜாஜ் பிளாட்டினா - எதை வாங்கினால் லாபம்?
Affordable Safe Cars: குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
Upcoming Maruti EV Cars: பட்ஜெட் விலை.. மிரளவைக்கும் மைலேஜ்! சந்தைக்கு வரப்போகும் மாருதி சுசுகியின் 3 மின்சார கார்கள் - என்னென்ன?
Upcoming Maruti EV Cars: பட்ஜெட் விலை.. மிரளவைக்கும் மைலேஜ்! சந்தைக்கு வரப்போகும் மாருதி சுசுகியின் 3 மின்சார கார்கள் - என்னென்ன?
Top Diesel Automatic Cars: ஹூண்டாய் வென்யூ முதல் டாடா நெக்ஸான் வரை; ரூ.15 லட்சத்துக்குள் டாப் டீசல் ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்
ஹூண்டாய் வென்யூ முதல் டாடா நெக்ஸான் வரை; ரூ.15 லட்சத்துக்குள் டாப் டீசல் ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget