Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Petrol Diesel Stock : பெட்ரோல் டீசல் கிடைக்காத நிலை உருவாகும் என பரவிய வதந்தியால் ஏராளமான மக்கள் பல பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான பெட்ரோல, டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போர்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போர் கடந்த 13 நாட்களாக நீடித்து வருகிறது. ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியை ஈரான் மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீதும் ஈரான் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.
கேஸ் தட்டுப்பாடு- பதற்றத்தில் மக்கள்
இதனால் நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க முடியாத நிலையானது உள்ளது. இதனால் பல நாடுகளில் எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளது. இந்தியாவில் பல ஓட்டல்கள் முடங்கியுள்ளது. ஓட்டல்களில் வணிக சிலிண்டர்கள் இல்லாமல் விறகு அடுப்புக்கு மாறி வருகிறார்கள். மேலும் வீடுகளுக்கு முன்பதிவு செய்யும் கேஸ் புக்கிங்கும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தாக பெட்ரோல் டீசல் இல்லாத நிலை உருவாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து தமிழகத்தில் பல பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல்களை தங்களது வாகனங்களில் பிடித்து செல்லும் நிலையானது நீடித்து வருகிறது.
90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் இருக்கு
மேலும் ஆபத்தான வகைகளில் பாட்டில்கள், கேன்களிலும் பெட்ரோல் டீசலை அதிகளவு வாங்கி செல்லும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு அடுத்த 90 நாட்களுக்கு இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க நிர்வாகி முரளி கூறுகையில், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இல்லையெனவும் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகவில்லை என கூறியுள்ளார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
எனவே மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், தமிழகத்தில் 21 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் உள்ளது. மேலும் தமிழகத்திற்கு மூன்று எண்ணெய் நிறுவனங்களின் மூலம் பெட்ரோல் டீசல் சப்ளை செய்யப்படுகிறது. அங்கு 21 நாட்களுக்கு தேவையான கையிருப்பு உள்ளது. எனவே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான தற்போது சூழல் இல்லையென கூறியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















