மேலும் அறிய

LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!

LPG Gas Cylinder Booking: போன் நம்பர் மட்டுமல்லாது 6 வழிகளில் எளிமையாக கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். எப்படி என்று விரிவாகக் கீழே காணலாம்.

போர்ச் சூழலில் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தற்காலிகமாக ஏற்பட்டுள்ள நிலையில், போன் நம்பர் மட்டுமல்லாது எளிமையாக 6 வழிகளில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். எப்படி?

தொலைபேசி மூலம் அழைத்து புக் செய்ய நினைத்தால் ஸ்விட்ச் ஆஃப் அல்லது நாட் ரீச்சபிள் என்று வருகிறது இதனால் கேஸ் கிடைக்காமல் போய்விடும் என்று சாமானியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சிலிண்டர் புக் செய்ய போன் கால் மட்டுமே ஒரே வழி கிடையாது. இன்னும் பல வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று காணலாம்.

ஹேங் ஆவதுதான் பிரச்சினை

பொதுவாக தினந்தோறும் சுமார் 300 சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 900 முதல் 1000 சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ஒரே நேரத்தில் ஏராளமான கால்கள் வரும்போது சர்வர் ஹேங் ஆகி, முன்பதிவு ஆவதில்லை. ''அதிகப்படியான அழைப்புகள் வருவதால்தான் பதிவை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் மக்கள் யாரும் வீதியடைய வேண்டாம்'' என்று கேஸ் சிலிண்டர் டீலர்கள் தெரிவிக்கின்றனர்.


LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!

இங்குள்ள நிலையை பொறுத்தவரை பாரத், இண்டேன், எச்பி ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் அதிக அளவிலான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் கேஸ் சிலிண்டர்களை எப்படி முன்பதிவு செய்வது என்று பார்க்கலாம். 

Indane: சிலிண்டரை முன்பதிவு செய்ய 75888-88824 என்ற எண்ணுக்கு REFILL என்று அனுப்ப வேண்டும்.

HP Gas: சிலிண்டரை முன்பதிவு செய்ய 92222-01122 என்ற எண்ணுக்கு BOOK என்று அனுப்ப வேண்டும்

Bharat Gas: சிலிண்டரை முன்பதிவு செய்ய 1800-22-4344 என்ற எண்ணுக்கு BOOK என்று அனுப்ப வேண்டும்.


LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!

எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு செய்வது எப்படி?

கேஸ் சிலிண்டர் முன்பதிவை எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி மூலமாகவும் மேற்கொள்ளலாம். குறிப்பாக Indane ​சிலிண்டருக்கு 7718955555 என்ற எண்ணுக்கு உங்களுடைய 16 இலக்க கன்ஸ்யூமர் ஐடியை பதிவிட்டு, ஓர் இடைவெளி விட்டு REFILL என டைப் செய்து அனுப்பவும். எனினும் இதற்கு தொலைபேசி எண் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

​HP கேஸ் சிலிண்டரை (Hindustan Petroleum) பெற, 9092223456 என்ற எண்ணுக்கு உங்களுடைய 16 இலக்க கன்ஸ்யூமர் ஐடியை பதிவிட்டு, ஓர் இடைவெளி விட்டு HPGAS என டைப் செய்து அனுப்பவும்.

​அதேபோல பாரத் கேஸ் சிலிண்டரைப் பெற 7715012345 அல்லது 7718012345 என்ற எண்ணுக்கு கன்ஸ்யூமர் எண்ணை உள்ளிட்டு, ஓர் இடைவெளி விட்டு LPG என டைப் செய்து அனுப்பவும்.


LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!

செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி?

இவை இரண்டையும் விட மிகவும் எளிதான வழி செயலி மூலமாக புக் செய்வதுதான். இந்த மூன்று நிறுவனங்களும் தனித்தனியாக மூன்று செயலிகளை வைத்திருக்கின்றன. அந்த செயலிகளை பிளே ஸ்டோரில் நேரடியாக சென்று தரவிறக்கம் செய்தும் கேஸ் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய சிலிண்டர் எங்கே இருக்கிறது என்பதையும் நம்மால் ட்ராக் செய்ய முடியும்.

செயலி பெயர்கள் என்ன?

இண்டேன்: IndianOil ONE app.

எச்பி கேஸ்: HP Pay app.

பாரத் கேஸ்: Bharatgas app (or Hello BPCL).

ஜிபே, போன் பே, மொபிக்விக், அமேசான் ஆகிய தேர்ட் பார்ட்டி செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.


LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!

செயலி இல்லாமல் நேரடியாக இணையதளம் மூலமாகவும் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

my.ebharatgas.com,

myhpgas.in,

cx.indianoil.in

இணைய வசதிகள் இல்லாதவர்கள் IVRS மற்றும் மிஸ்டு கால் சேவை மூலமாகவும், 24 * 7 முன்பதிவு செய்யலாம்.

இண்டேன்: 77189-55555

எச்பி கேஸ்: 88888-23456

பாரத் கேஸ்: 77150-12345 அல்லது 77180-12345

மிஸ்டு கால் சேவை

எச்பி கேஸ்: 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

பாரத் கேஸ்: 77109-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிக்கூட முன்பதிவு செய்ய முடியாதவர்கள் மட்டும் கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாகச் சென்றால் போதும்.

இந்தத் தகவல்களை வீடியோ வடிவிலும் காணலாம். 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget