மேலும் அறிய

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

மதுரையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முண்ணனியினர் கோவில் மற்றும் மலையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்திய போது தடுப்புகளை தள்ளிவிட்டு முற்றுகையிட முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை இதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து உள்ளே வந்ததால் காவல்துறையினருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீபத்தூணில் மனுதாரர் 6 நபர்களுடன் சென்று தீபம் ஏற்றலாம் எனவும் அதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்களுடன் தீபத்தூணிற்கு சென்று தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பிற்காக 62 CISF படையினர் மலைப்பாதை பகுதிக்கு வருகை தந்தனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன்  CISF படையினர் மலை மேல் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது 

பின்னர் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நிர்வாக நீதிபதியிடம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு முறையீடு செய்யப்பட்டதால் நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக பாதுகாப்பு பணிக்காக வந்த CISF படையினர் மீண்டும் திரும்பிச் சென்றனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பாக அமர்ந்து இந்து முன்னணி  மற்றும் பாஜகவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற கூறி போராட்டம் நடத்தினர்

முன்னதாக திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் பகுதியில் பாஜக நிர்வாகி சூர்யா தலைமையில் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செல்வதற்காக சென்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதையடுத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பாஜக நிர்வாகி SG சூர்யா மயங்கிவிழுந்த நிலையில் தண்ணீர் தெளித்து அழைத்துசென்றனர்.

பாஜகவினரின் போராட்டம் காரணமாக 16 கால் மண்டபத்திற்கு முன்பாக நடைபெறும் சொக்கப்பனை நிகழ்விற்கு சுவாமி உலா வருகை சிறிதுநேரம் தாமதமானது. பின்னர் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் சொக்கப்பனை நிகழ்வு முடிவடைந்து தாமதமான நிலையில் சுவாமி வீதி உலா ரத வீதி வழியாக  செல்லாமல் சன்னதி தெரு வழியாக சுவாமி சன்னதி வழியாக மீண்டும் கோவிலுக்கு சென்றடைந்தது.

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"மேயர் ஏன் வரலன்னு , அவங்கக்கிட்ட கேளுங்க" முகாமில் எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் அதிரடி பதில்
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
விருதுநகர் வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு விருது, பாதுகாப்புக்கு ஆட்சியர் அழைப்பு!
விருதுநகர் வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு விருது, பாதுகாப்புக்கு ஆட்சியர் அழைப்பு!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget