Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes In India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படும், அதிவேகமான இருசக்கர வாகனங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Fastest Bikes In India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படும், அதிவேகமான இருசக்கர வாகனங்களின் உச்சபட்ச வேகம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிவேகமான இருசக்கர வாகனங்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனங்கள் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு தரப்பினருக்கு இது அத்தியாசவசியமாக இருக்கும் நிலையில், மற்றொரு தரப்பினருக்கு ஆடம்பரமாகவும் திகழ்கிறது. அந்தவகையில் ப்ரீமியம் செக்மெண்டில் உள்ள பல்வேறு விதமான அதிவேக இருசக்கர வாகனங்களை, ஜிபிஎஸ் அடிப்படையிலான தரவு பதிவு முறையைப் பயன்படுத்தி ஆட்டோகார் இந்தியா நிறுவனம் பரிசோதித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் இன்று தயாரிக்கப்படும் பல மோட்டார் சைக்கிள்கள், பொதுவாக குறைந்த திறன் கொண்டவையாக இருந்தாலும், உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்குகின்றன என்பது உறுதியாகியுள்ளது. மேலும், 0-100 கிமீ எனும் வேகத்தை அதிவேகமாக எட்டும் 5 மோட்டர் சைக்கிள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் டாப் 5 வேகமான பைக்குகள்:
5. கேடிஎம் 390 எண்டிரோ R
KTM 390 எண்டிரோ R என்பது 390 பிளாட்ஃபார்மின் மிகவும் ஆஃப்-ரோடு சார்ந்த வகையாகும். அதன் நீண்ட சஸ்பென்ஷன் பயணம் மற்றும் ஆஃப்-ரோட் டயர்கள் இருந்தபோதிலும், 390 எண்டிரோ R, வெறும் 5.9 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வேகத்தை எட்டுகிறது. 399cc, ஒற்றை சிலிண்டர் இன்ஜின் மூலம் 46hp மற்றும் 39Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. பைக்கின் ஒப்பீட்டளவில் குறைந்த எடை வலுவான டார்க்கை வழங்க உதவுகிறது. 390 எண்டிரோ R-ன் ஆன்ரோட் விலை சென்னையில் சுமார் ரூ.4.07 லட்சமாகும். அதிகபட்சமாக மணிக்கு சுமார் 171 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது.
ALSO READ: இதையும் படியுங்கள்: Top 5 Fastest Bikes: உலகின் அதிவேகமான மோட்டார் சைக்கிள்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ
4. கேடிஎம் 390 அட்வென்ச்சர்
2025 KTM 390 அட்வென்ச்சர் பைக், அதன் பிளாட்ஃபார்மைப் பகிர்ந்து கொள்ளும் Enduro R-ஐ விட 5 கிலோ அதிக எடை கொண்டுள்ளது. ஆனாலும் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 5.8 விநாடிகளில் எட்டுகிறது. ஒரே மாதிரியான சூழலில் பரிசோதிக்கப்பட்டாலும், சாலை சார்ந்த டயர்களால் இந்த கூடுதல் பலன் கிடைத்ததாக கருதப்படுகிறது. KTM 390 அட்வென்ச்சரின் ஆன் ரோட் விலை சென்னையில் ரூ.4.67 லட்சமாகும். அதிகபட்சமாக மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது.
3. கேடிஎம் 390 டியூக்
சமீபத்திய தலைமுறை KTM 390 டியூக் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட ஆற்றல் உற்பத்தி திறனை கொண்ட அதே 399cc இன்ஜினை கொண்டிருந்தாலும், டியூக்கின் இலகுவான எடை அதை 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.21 விநாடிகளில் எட்ட உதவுகிறது. KTM 390 டியூக்கின் ஆன் ரோட் விலை சென்னையில் ரூ.3.60 லட்சம். அதிகபட்சமாக மணிக்கு சுமார் 171 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது.
2. ஏப்ரிலியா RS 457
ஏப்ரிலியா RS 457 பைக்கில் 47.6hp மற்றும் 43.5Nm டார்க் உற்பத்தி செய்யும் 457cc பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சோதனையின் போது பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.99 விநாடிகளில் எட்டியது. சென்னையில் ரூ.5.57 லட்சம் என்ற அதிகப்படியான ஆன் - ரோட் விலையுடன் பட்டியலின் விலையுயர்ந்த பைக்காக இருந்தாலும் கொண்டிந்தாலும், பணத்திற்கு நிகரான செயல்திறனை இந்த வாகனம் வழங்குகிறது. அதிகபட்சமாக மணிக்கு சுமார் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது.
1. ஏப்ரிலியா டுவோனோ 457
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வேகமான மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை ஏப்ரிலியா டுவோனோ 457 பெறுகிறது. இது மேற்குறிப்பிடப்பட்ட மாடலின் 457cc பேரலல்-ட்வின் இன்ஜினை பகிர்ந்து கொள்கிறது மற்றும் அதன் எடை 175 கிலோ ஆகும். இருப்பினும், டுவோனோ ஒரு பெரிய பின்புற ஸ்ப்ராக்கெட்டுடன் குறுகிய கியரை இயக்குகிறது. அதனால்தான் இது 100 கிமீ வேகத்தை வெறும் 4.88 விநாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு சுமார் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் இதன் ஆன் - ரோட் விலை ரூ.5.27 லட்சமாகும்.





















