Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர் உரிமை தொகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வருகிற டிசம்பர் 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார்.

மகளிர் உரிமை தொகை
திமுக கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்பெற பல்வேறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், குடும்பத்தில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது, குடும்பத்தில் யாரும் அரசு ஊழியராக இருக்கக் கூடாது, குடும்பத்தில் யாரும் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. குடும்பத்தில் 4 சக்கர வாகனம் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
1.14 கோடி மகளிர்களுக்கு 1000 ரூபாய்
இதனையடுத்து கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 1.14 கோடி பயணாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் பல லட்சம் பேர் போட்டி போட்டு விண்ணப்பித்திருந்தனர். சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
புதியவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி உரிமைத்தொகை
இதனைடுத்து விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் சரிபார்ப்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. டிசம்பர் 15ஆம் தேதி முதல் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கூடுதல் பயனாளிகளுடன் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்





















