மேலும் அறிய
Prawn Pepper Fry : கிராமத்து முறையில் இறால் மிளகு வறுவல் செய்வது எப்படி?
Prawn Pepper Fry : கிராமத்து முறையில் இறால் மிளகு வறுவல் ஈஸியாக வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இறால் மிளகு வறுவல்
1/6

தேவையான பொருட்கள் : மல்லி விதை - 2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி , மிளகு - 1 மேசைக்கரண்டி, அரைத்த மசாலா தூள், இறால் - 200 கிராம், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, பட்டை - 1 துண்டு, கிராம்பு - 4 , ஏலக்காய் - 1 , காய்ந்த மிளகாய் - 3 , பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி, உப்பு.
2/6

செய்முறை : முதலில் இறாலை குடல் நீக்கி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது கடாயில் எண்ணெய் இல்லாமல் தனியா, சீரகம், முழு மிளகு சேர்த்து வறுக்கவும். அதன்பின் ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும், அத்தபின் பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5/6

வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அடுத்தது கழுவிய இறாலை துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறவும்.
6/6

அதன் பிறகு உப்பு மற்றும் அரைத்த மசாலா தூள் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான கிராமத்து ஸ்டைல் இறால் மிளகு வறுவல் தயார்.
Published at : 17 Aug 2024 12:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion