Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்; பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அப்துல் ரஹ்மான்!
திருச்சியிலிருந்து சென்னைக்கு 25 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து, திண்டிவனம் அருகேயுள்ள கேனிப்பட்டு பகுதியில் திடிரென முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாடை இழந்த பேருந்து எதிர் திசையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது, பைக்கை ஓட்டிவந்த கமலக்கண்னன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானர். பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அந்த பகுதி வழியாக வந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சேக் அப்துல் ரஹ்மான் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் வர வைத்து பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதேபோல காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்களை மாற்று வாகனம் வர வழித்து சென்னைக்கும் அனுப்பி வைத்து பிறகு அங்கு இருந்து விழுப்புரம் புறப்பட்டு சென்றார். இந்த செயலால் ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு விசாரனை செய்து வருகின்றனர்.





















