LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட்ராமன் நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அபய குமார் சிங் ஐபிஎஸ், பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த புதிய பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் என்பதை விரிவாக காணலாம்..
"அபய் குமார் சிங் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1992 பேட்ச் IPS ஆஃபிசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வெறும் 27 வயது தான். தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பதவிகளை அலங்கரித்தார். ஆரம்பத்தில் மதுரை சூபரிண்டெண்டென்ட் ஆஃப் போலீஸ் (SP), பின்னர் ராமநாதபுரம் துணைIG,திருநெல்வேலி கமிஷனர் ஆஃப் போலீஸ் உட்பட சென்னையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2017-ல் TNPL சீஃப் விஜிலன்ஸ் ஆஃபிசராகவும் பணியாற்றி வந்தார் அபய் குமார்.
2021-ல் idol விங் ADGP-ஆக நியமனம். பின் பழங்கால சிலைகளைத் திரும்பப் பெறும் பணியில் பொன் மாணிக்கவேல் ஐஜி-யின் இடத்தில் அவர் நியமிக்கப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. பின்னர் 2023-ல்ஆயுதப்படையில் ஏ.டி.ஜி.பியாகவும், சி.பி.சி.ஐ.டி.,நியமிக்கப்பட்டார். அதன் பிறகு டி.ஜி.பி அந்தஸ்திற்கு, அபய் குமார் சிங் பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து பிரீமியர் கேப்டன், பிரஸிடென்ட்ஸ் போலீஸ் உள்ளிட்ட பல மெடல்களை பெற்றுள்ளார் அபய் சிங்
அபய் சிங்கின் விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட்டில், அவர் பல உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தார். TNPL-ல் சீஃப் விஜிலன்ஸ் ஆஃபிசராக, கம்பெனி ஃப்ராட்-ஐ கண்டறிந்து சுத்தப்படுத்தினார். 2024-ல் விஜிலன்ஸ் அவேர்னஸ் வீக்-இல், இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி, சென்னை ஏர்போர்ட் போன்ற இடங்களில் இளைஞர்களுக்கு மோட்டிவேஷ்னல் ஸ்பீச் கொடுத்துள்ளார். பல அழுத்தங்கள், தொலைக்காட்சி விமர்சனங்கள் இருந்தபோதும் அவர் எதிலும் பின் வாங்கியது இல்லையாம்.
தமிழ்நாடு டிஜிபியாக பொறுப்பு வகித்த சங்கர் ஜிவால் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார் . இந்தநிலையில் நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் 15 நாட்களுக்கு மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபி பதவி அபய்குமார் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கும் நிலையில், தற்போதைய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு பதிலாக மீண்டும் பொறுப்பு டி.ஜி.பி.யாக அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளது விமர்சன வலையில் சிக்கியுள்ளது..





















