மேலும் அறிய

Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு

இந்தியாவிற்கு 50 சதவீத வரியை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பின்பற்றி, மெக்சிகோவும் அதே அளவு வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால், வர்த்தக உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்தியா மீது 50 சதவீத வரியை விதிக்கும் முடிவுக்கு, மெக்சிகோவின் செனட்  சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

அமெரிக்காவை பின்பற்றி இந்தியாவிற்கு 50% வரியை விதிக்கும் மெக்சிகோ

அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீராக்கும் முயற்சியாக, வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை உயர்த்த, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரியை விதித்த அவர், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, ஏப்ரல் 2-ம் தேதி முதல் கட்டமாக 25 சதவீத வரிவையும், தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 27-ம் தேதி மீண்டும் 25 சதவீத வரியையும் விதித்து அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை விதிப்பதாக மெக்சிகோ அறிவித்துள்ளது. இந்திய மட்டுமல்லாமல், சீனா மற்றும் பல ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 50 சதவீதம் வரை புதிய வரிகளை விதிக்க மெக்சிகோவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா-மெக்சிகோ வர்த்தக உறவுகளில் பாதிப்பு

வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், இந்த புதிய வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்த வரியை விதித்துள்ளதாக, மெக்சிகோ அதிபர் கிளாடகயா ஷீன்பாமின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வரி விதிக்கும் மெக்சிகோவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இது, சீனா உட்பட வர்த்தக கூட்டாளிகளின் நலன்களுக்கு கணிசமான அளவில் தீங்கு விளைவிக்கும் என அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கை, இந்தியா-மெக்சிகோ ஆகிய இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

2024-ம் ஆண்டில், இந்தியா, மெக்சிகோ இடையே 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே சமயம், இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் இந்தியா ஒன்பதாவது பெரிய நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரியால் ஏற்படும் பாதிப்பு என்ன.?

மெக்சிகோவின் இந்த அறிவிப்பால், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளன. இந்த வரிகள், சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிக அளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், அடுத்த ஆண்டு கூடுதலாக 33,910 கோடி டாலர் வருவாயை ஈட்டும் நோக்கத்திலும், இந்த வரி உயர்வுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Kia Carens Clavis HTE EX: கேரன்ஸ் கிளாவிஸ்ஸின் புதிய வேரியண்ட்டை களமிறக்கிய கியா; சன்ரூஃபோட இவ்ளோதான் விலையா.?
கேரன்ஸ் கிளாவிஸ்ஸின் புதிய வேரியண்ட்டை களமிறக்கிய கியா; சன்ரூஃபோட இவ்ளோதான் விலையா.?
Mercedes Maybach GLS: ரூ.42 லட்சத்தை குறைத்த மெர்சிடஸ் பென்ஸ்.. உள்ளூரிலேயே தயாரான ப்ரீமியம் கார், எப்படி இருக்கு?
Mercedes Maybach GLS: ரூ.42 லட்சத்தை குறைத்த மெர்சிடஸ் பென்ஸ்.. உள்ளூரிலேயே தயாரான ப்ரீமியம் கார், எப்படி இருக்கு?
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Embed widget