மேலும் அறிய

Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற 1 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.98 கோடி ரூபாய் செலுத்தி பெறும் வகையில், ட்ரம்ப் கோல் கார்டு(தங்க அட்டை) விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு சென்று வேலை பார்ப்பதற்காக பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது எச்1பி விசா. இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த விசாவை பெற்று அங்கு சென்று வேலை பார்ப்பவர்களுக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக,  பல வருடங்களுக்குப் பின் 'கிரீன் கார்டு' என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் வேலை பார்க்கவும், அங்கு வசிக்கவும், ‘கோல்டு கார்டு‘ விசாவை அறிமுகப்படுத்தியுள்ளார் அதிபர் ட்ரம்ப். இதற்காக என்ன செய்ய வேண்டும், எப்படி விண்ணப்பிப்பது.? பார்க்கலாம்.

ட்ரம்ப் அறிமுகம் செய்த ‘கேல்டு கார்டு‘ விசா

வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு சென்று வேலை பார்ப்பதற்கும், அங்கேயே நிரந்தரமாக தங்கம் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள ‘கோல்டு கார்டு‘ விசாவை, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிமுகம் செய்துள்ளார். இதை பெறுவதற்காக, அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் டாலர்கள், அதாவது தற்போதைய இந்திய மதிப்பில் சுமார் 8.98 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும். அவ்வாறு பணம் செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெற இந்த கோல்டு கார்டு அனுமதிக்கிறது.

‘கோல்டு கார்டு‘ குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

இந்த விசா கிரீன் கார்டை போன்றது தான் என்றாலும், அதைவிட பெரிய நன்மைகளை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும், அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும் என்றும், அதன்மூலம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தத் திட்டம், பெரும் நிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களை பணியமர்த்தி, அவர்களை தக்கவைத்துக் கொள்ள உதவும்" என்றும் தெரிவித்தார்.

‘கோல்டு கார்டு‘க்கு எப்படி விண்ணப்பிப்பது.?

இந்த கோல்டு கார்டு-க்கான விண்ணப்பங்கள் https://trumpcard.gov/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த இணைய முகவரிக்கு சென்று அங்கு கேட்கப்பட்டுள்ள தரவுகளை சமர்ப்பித்து இந்த கோல்டு கார்டு-க்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு

இந்த விசாவை பெறுவதற்கான செயலாக்கக் கட்டணம் செலுத்தப்பட்ட உடன், சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் செயல்முறைக்கு ஒரு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விசா நேர்காணலில் கலந்து கொண்டு, ஆவண கோரிக்கைகளுக்கு விரைவாக பதிலளிக்க வேண்டும்.

இந்த கோல்டு கார்டு விசாவை வைத்திருப்பவர்களுக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு விதிக்கப்படுவது போன்றே வரி விதிக்கப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்கள் சேர்ப்புக்கு என்ன விதிமுறை.?

இந்த கோல்டு கார்டு விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகளை விண்ணப்பத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15,000 டாலர்கள் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலர்களும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.

கோல்டு கார்டு விசாவை ரத்து செய்ய முடியுமா.?

அமெரிக்காவில் பெறப்படும் எந்த ஒரு விசாவையும் போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால், இந்த கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம். அதற்கான அதிகாரம் அந்த நாட்டு அரசிற்கு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு,  அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) விசா திட்டம் கொண்டு வரப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார். அதற்காக 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.44.98 கோடி) செலுத்தினால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்றும், அதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அதன்பின் கோல்டு கார்டு விசாவுக்கான கட்டணத்தை குறைத்து, தற்போது அதை அறிமுகம் செய்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Affordable Sedans Cars India: டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Embed widget