மேலும் அறிய
Banana Bread Recipe : சுவையான வாழைப்பழ ப்ரெட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
Banana Bread Recipe : குழந்தைகள் ப்ரெட் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் வீட்டிலேயே வாழைப்பழ ப்ரெட் செய்து கொடுக்கலாம்.

சாக்லேட் சிப்ஸ் வாழைப்பழ ப்ரெட்
1/6

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பட்டை தூள், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில், உப்பில்லாத வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
2/6

ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு முட்டைகளை சேர்த்து கிரீமியாக வரும் வரை பீட் செய்யவும். நறுக்கிய வாழைப்பழம் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
3/6

இப்போது மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு சாக்லேட் சிப்ஸ் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
4/6

பேக்கிங் டின்னில் உள்ளே வெண்ணெய் தடவி ப்ரெட் கலவையை சேர்க்கவும்.சமமாக பரப்பி காற்று குமிழ்கள் வெளியேற டின்னை தட்டவும்.
5/6

மைக்ரோவேவ் ஓவனை 175°C 15 நிமிடம் முன் கூட்டியே சூடு செய்யவும். பேக்கிங் டின்னை வைத்து 175°C 70 நிமிடம் பேக் செய்யவும்.
6/6

ஆறிய பிறகு டின்னில் இருந்து பிரட் -ஐ எடுத்து துண்டுகளாக வெட்டவும். சுவையான சாக்லேட் சிப்ஸ் வாழைப்பழ ப்ரெட் தயார்.
Published at : 01 Jun 2024 09:34 AM (IST)
Tags :
Snacks Recipeமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
நிதி மேலாண்மை
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement