Mahindra Vision T: மின்சார எடிஷனில், ரக்கட் லுக்கில் மிரட்டிய தார் - டெக் கேஜட்ஸ், 500 கிமீ ரேஞ்ச், லாஞ்ச் எப்போ?
Electric Thar SUV: மஹிந்திரா நிறுவனம் தனது மின்சார எடிஷன் தார் கார் மாடலுக்கான கான்செப்டை காட்சிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளது.

Electric Thar SUV: மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார எடிஷன் தார் கார் மாடல், 2027ம் ஆண்டு உற்பத்திக்கு செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்திரா தார் மின்சார எடிஷன்:
மஹிந்திரா நிறுவனம் தனது எதிர்கால கார் மாடல்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியை, Freedom NU என்ற பெயரில் மும்பையில் நடத்தியது. அதில், ஏற்கனவே பல டீசர்கள் மூலம் டீஸ் செய்யப்பட்டு வந்த விஷன் T என்ற கான்செப்டை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கான்செப்ட் ஆனது கார் எப்படி உருவாகி வருகிறது என்பதற்கான தெளிவான கண்னோட்டத்தை வழங்குவதோடு, மின்சார எடிஷன் தார் எஸ்யுவி 2027ம் ஆண்டுக்குள் சந்தைப்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
மஹிந்த்ரா விஷன் T - வெளிப்புற வடிவமைப்பு:
மஹிந்திரா விஷன் T கான்செப்டானது சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற, ஃபியூட்சர்ஸ்கேப் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட Thar.e கான்செப்டின் ஒரு மேம்படுத்தப்பட்ட எடிஷனாகும். அதன்படி, விஷன் T கான்செப்டானது Thar.e வடிவமைப்பை நினைவுபத்தும் விதமாக பாக்ஸி தோற்றத்தை பின்பற்றுகிறது. இதுபோக தட்டையான சதுரமான பானட், மஸ்குலர் வீல் ஆர்க்ஸ், பாண்ட் லேட்சஸ் மற்றும் அனைத்து தரை சூழல்களுக்குமான டயர்கள் ஆகியவை கவனத்தை ஈர்கக்கூடிய அம்சங்களான இடம்பெற்றுள்ளன.
முன்பக்கத்தில் தார் ராக்ஸை நினைவூட்டும் வகையில் ஹாரிசாண்டல் ஸ்லேட்டுகளுடன் ட்வின் பார்ட் க்ரிலை பெறுகிறது. இரண்டு வெர்டிகல் செக்சன்களை கொண்ட சதுரமான முகப்பு விளக்கு வடிவமைப்பை பெற்றுள்ளது. பின்புறத்தில் Thar.e கான்செப்டிலிருந்து மேம்படுத்தப்பட்ட வெர்டிகல் லைட் எலிமென்ட்கள், டெயில்கேட்-மவுண்டட் ஸ்பேர் வீல் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளன.
மஹிந்த்ரா விஷன் T - உட்புற அம்சங்கள்:
வெஹைகிள் டு வெஹைகிள் மற்றும் வெஹைகிள் டு லோட் ஆகிய இரண்டு அம்சங்களும் இந்த காரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் மிகப்பெரிய டச்ஸ்க்ரீன், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், லெவல் 2 ADAS ஆகியவற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகளும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லாவிட்டாலும், இந்த காரானது நிறுவனத்தின் முற்றிலும் புதிய NU -IQ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Made in India. How cool is that! Mahindra Concept Vision T off the “nu” platform. World class design & global ambitions - fitting on this day we celebrate independence! And there’s more coming… @BosePratap and team take another bow!
— Siddharth Rashmi Vinayak Patankar (@sidpatankar) August 15, 2025
SVP #Mahindra #VisionT #design @rajesh664 pic.twitter.com/ROlDZWz9fg
மஹிந்த்ரா விஷன் T - புதிய பிளாட்ஃபார்ம்
புதிய பிளாட்ஃபார்மானது அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் நீளமான வீல்பேஸை கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. இதுபோக பல்வேறு விதமான பவர் ட்ரெயின்கள், ஃப்ரண்ட் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன்கள், இடது மற்றும் வலதுபுற வாகன ஓட்டுனர் இருக்கை கான்ஃபிகரேஷன்களை அனுமதிக்கும் வகையிலும் புதிய பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான இருக்கை உயரம் மற்றும் விசாலமான கேபின் இடவசதியையும் இந்த பிளாட்ஃபார்ம் உருவாக்கும் என கூறப்படுகிறது.
500 கிலோ ம்கிட்டர் ரேஞ்ச்:
கரசுமுரடான தோற்றத்துடன் தாரின் மின்சார எடிஷன் உற்பத்திக்கு நெருக்கமான இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்படும் இந்த காரானது, முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகமான சார்ஜிங்கிற்காக டிசி ஃபாட் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்படலாம். விரைவில் தார் குடும்பத்தில் இணைய உள்ள இந்த மஹிந்த்ரா விஷன் T காரானது, போட்டித்தன்மை மிக்க விலையுடன் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.





















