மேலும் அறிய
Yogi Babu in Boat: நெய்தல் கதையில் யோகி பாபு..வெளியானது ‘போட்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்!
Yogi Babu in Boat: சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
யோகி பாபு
1/6

சின்னத்திரையில் கலக்கிய பல நடிகர்கள் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து இன்று பெரிய அளவில் ஆளுமை செய்து வருகிறார்கள். அந்த வகையில் வெள்ளித்திரையில் ஒரு தரமான காமெடியனாக, பார்த்தாலே சிரிப்பு வரும் வகையில் பருமனான உடல் தோற்றம், சுருட்டையான தலைமுடி, பேஷியல் எக்ஸ்பிரஷன்ஸ் என ரசிகர்களை தனது பக்கம் எளிதில் கவர்ந்து விட்டார், யோகி பாபு.
2/6

ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டுமே இருந்துவிடாமல் ஹீரோவாகவும், உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அப்லாஸ் பெற்றார் யோகி பாபு. கோலமாவு கோகிலா, கூர்கா,தர்மபிரபு, யானை முகத்தான், பேய் மாமா, பன்னிக்குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.
3/6

பல முன்னணி நடிகருடன் இணைந்து காமெடியில் கலக்கிய யோகி பாபு தற்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் சரித்திர படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
4/6

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களான வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டனர்.
5/6

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' பாணியில் ஒரு ஆல் டைம் ஃபேவரட் படத்தை எதிர்பார்த்த திரை ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக அமைந்துள்ளது.
6/6

அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கும் இப்படத்துக்கு 'போட்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு கடல் சார்ந்த கதை என்பது டைட்டில் வீடியோ மூலம் அறியப்படுகிறது.
Published at : 16 Jul 2023 01:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















